மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

நாட்டில் இதுவரை 185.90 கோடி கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டன: சுகாதாரத்துறை

நாட்டில் இதுவரை 185.90 கோடி கரோனா தடுப்பூசிகள் டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

News image
Updated On :12 ஏப்ரல் 2022, 6:13 am


நாட்டில் இதுவரை 185.90 கோடி கரோனா தடுப்பூசிகள் டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை செவ்வாய்க்கிழமை அளித்துள்ள தரவுகளின்படி,

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் (இன்று காலை 7 மணி வரை)  2,17,89,216 தடுப்பூசி மையங்கள் மூலம் இதுவரை மொத்தம் 1,85,90,68,616 (185.90 கோடி) தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளது. 

12-14 வயதிற்குள்பட்ட இளம் பருவத்தினருக்கு கரோனா தடுப்பூசி மார்ச் 16 இல் தொடங்கப்பட்டது. இதுவரை, சுமார் 2,27,48,406-க்கும் அதிகமான முதல்கட்ட தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளது.  

18-59 வயதினருக்கு கடந்த ஏப்ரல் 10-ம் தேதி முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகின்றது. முதல் நாளில்  27,401 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

மேலும், நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 796 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 946 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை (பெருந்தொற்றின் தொடக்கத்திலிருந்து) 4,25,04,329 ஆக உள்ளது.

நாட்டில் தற்போது சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 10,889 ஆகக் குறைந்துள்ளது, இது நாட்டின் மொத்த தொற்று பாதிப்பில்  0.03 சதவிகிதம் ஆகும். குணமடைந்தோர் விகிதம் தற்போது 98.76 சதவிகிதமாக உள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் 4,06,251 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதுவரை மொத்தம் 79,45,25,202 (79.45 கோடி) கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.