விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

கைபர் பக்துன்க்வாவில் துப்பாக்கிச்சூடு: 2 பாகிஸ்தான் வீரர்கள் சுட்டுக் கொலை

பிர்மல் பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் ராணுவ மேஜர் உள்பட இரண்டு பாகிஸ்தான்வீரர்கள் கொல்லப்பட்டனர். 

News image
Updated On :13 ஏப்ரல் 2022, 6:36 am

DIN

கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் தெற்குவஜிரிஸ்தான் மாவட்டத்தில் உள்ள பிர்மல் பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் ராணுவ மேஜர் உள்பட இரண்டு பாகிஸ்தான்வீரர்கள் கொல்லப்பட்டனர். 

இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுவதாவது, 

அங்கூர் அடா பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக ராணுவத்தின் ஊடகப் பிரிவு அறிக்கை தெரிவித்துள்ளது. மேலும், இந்த தாக்குதலில் இரு ராணுவ வீரர்கள் காயமடைந்ததாக தகவல் வெளியிட்டுள்ளது.

பாதுகாப்புப் படையினருக்கு எதிரான பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளும் மீட்கப்பட்டுள்ளனர். 

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படையினர் அப்பகுதியில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும், சந்தேகத்தின் பேரில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், கைபர் பக்துன்க்வாவின் தேரா இஸ்மாயில் கான் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய ராக்கெட் தாக்குதலில் ஐந்து காவலர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.