ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

அசாமின் பர்பேட்டாவில் கனமழை: பெண் பலி

அசாமின் பர்பேட்டாவில் வியாழக்கிழமை இரவு பெய்த கனமழைக்கு ஒரு பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 

News image
கோப்புப்படம்
Updated On :15 ஏப்ரல் 2022, 7:09 am

DIN

அசாமின் பர்பேட்டாவில் வியாழக்கிழமை இரவு பெய்த கனமழைக்கு ஒரு பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 

பர்பேட்டாவில் நேற்றிரவு இடியுடன் கூடிய கனமழை காரணமாக, மாவட்டத்தின் ஜானியா லூர்புரியா கிராமத்தில் மரம் ஒன்று வேரோடு சாய்ந்து, அருகிலிருந்த வீட்டின் மேற்கூரையின் மீது விழுந்ததுள்ளது. இந்த விபத்தில் வீட்டிலிருந்த பெண்  சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உயிரிழந்த பெண் 45 வயதான புல்ஜன் நேசா என அடையாளம் காணப்பட்டுள்ளார். 

இதுகுறித்து ஜானியா ஜிலா பரிஷத் உறுப்பினர் ஹபிபுல்லா கூறுகையில்,

மரம் வேரோடு சாய்ந்து வீட்டின் மீது விழுந்ததில் நேசா உயிரிழந்தார். இது மிகவும் துரதிர்ஷ்டவசமான சம்பவம். ஜானியா பகுதியின் பல பகுதிகளில் பல வீடுகள் சேதமடைந்துள்ளன.  

பர்பேட்டா மாவட்டத்தில் உள்ள கல்காச்சியா, ஜானியா, பெல்லா, லச்சங்கா, குனியால்குரி மற்றும் பாலகான் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்தது, இதன் விளைவாக வீடுகள், வாகனங்கள் மற்றும் மரங்கள் வேரோடு சாய்ந்தன.

இதற்கிடையில், வங்காள விரிகுடாவில் இருந்து வடகிழக்கு மாநிலங்களுக்கு குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மேற்கு வங்கத்தை நோக்கி கடப்பதால் இடி மின்னலுடன் கூடிய பரவலான மழை பெய்யக்கூடும். 

சிக்கிம், அருணாச்சல பிரதேசம், அசாம், மேகாலயா, நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம் மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களில் அடுத்த 5 நாட்களுக்கு மழை தொடரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 

மேலும், கிழக்கு அருணாச்சல பிரதேசம், அசாம், மேகாலயாவில் அடுத்த ஐந்து நாட்களில் 500 மி.மீ மழை பெய்யும் எனவும், சனிக்கிழமை வரை ஆரஞ்சு நிற எச்சரிக்கையும் விடுத்துள்ளது. மற்ற வடகிழக்கு மாநிலங்கள் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்துள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.