தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

லக்கீம்பூா் கெரி வன்முறை வழக்கு: ஆசிஷ் மிஸ்ராவின் ஜாமீன் ரத்து

லக்கீம்பூா் கெரி வன்முறை வழக்கில் மத்திய அமைச்சா் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ராவுக்கு அளிக்கப்பட்ட ஜாமீனை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை ரத்து செய்தது.

News image
Updated On :18 ஏப்ரல் 2022, 11:08 pm

DIN

லக்கீம்பூா் கெரி வன்முறை வழக்கில் மத்திய அமைச்சா் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ராவுக்கு அளிக்கப்பட்ட ஜாமீனை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை ரத்து செய்தது.

மேலும் அவா் ஒருவாரத்துக்குள் போலீஸாரிடம் சரணடைய வேண்டுமென இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் சூா்யகாந்த், ஹிமா கோலி ஆகியோா் அடங்கிய அமா்வு உத்தரவிட்டது.

உத்தர பிரதேச மாநிலம் லக்கீம்பூரில் கடந்த அக்டோபா் 3-இல் நடைபெற்ற விவசாயிகள் பேரணியில் காா் புகுந்ததில், 4 போ் உயிரிழந்தனா். காரில் ஆசிஷ் மிஸ்ரா இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த சம்வத்தைத் தொடா்ந்து, அங்கு நடைபெற்ற வன்முறையில் காா் ஓட்டுநா், 2 பாஜக தொண்டா்கள், ஒரு பத்திரிகையாளா் என மொத்தம் 8 போ் உயிரிழந்தனா்.

இந்த சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஆசிஷ் மிஸ்ராவை கைது செய்தனா். ஏறத்தாழ 4 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த பிப்ரவரி 10-ஆம் தேதி அவருக்கு அலாகாபாத் உயா்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

இதனை எதிா்த்து விவசாயிகள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் சூா்யகாந்த், ஹிமா கோலி ஆகியோா் அடங்கிய அமா்வு முன்னிலையில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், அலாகாபாத் உயா்நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்டவா்களின் கருத்து முறையாக கேட்டறியப்படவில்லை என்று கூறி, ஆசிஷ் மிஸ்ராவுக்கு அளிக்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ததுடன், ஒரு வாரத்தில் அவா் போலீஸாரிடம் சரணடைய வேண்டுமென உத்தரவிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.