உ.பி.யில் காவலர்கள் விடுமுறை ரத்து 

உத்தரபிரதேச  மாநிலத்தில் உள்ள அனைத்து காவல்துறை அதிகாரிகளின் விடுமுறையையும் மே 4 வரை ரத்து செய்ததாக  திங்கள்கிழமை
யோகி ஆதித்யநாத்
யோகி ஆதித்யநாத்

லக்னோ: உத்தரபிரதேச  மாநிலத்தில் உள்ள அனைத்து காவல்துறை அதிகாரிகளின் விடுமுறையையும் மே 4 வரை ரத்து செய்ததாக  திங்கள்கிழமை இரவு உத்தரபிரதேச அரசு அறிவித்துள்ளது. விடுப்பில் இருப்பவர்கள் 24 மணி நேரத்திற்குள் அறிக்கை அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "எஸ்.எச்.ஓ., சி.ஓ., மாவட்ட  முதன்மை காவல்துறை அதிகாரிகள் முதல் மாவட்ட ஆட்சியர், கோட்ட ஆணையர் வரையிலான அனைத்து நிர்வாக/காவல்துறை அதிகாரிகளின் விடுமுறையை மே 4-ம் தேதி வரை  ரத்து செய்யப்படுகிறது. தற்போது விடுப்பில் உள்ளவர்கள் அடுத்த 24 மணி நேரத்திற்குள் பணிக்கு திரும்ப வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வரும் நாள்களில் பண்டிகைகளை முன்னிட்டு, இந்த உத்தரவை முதல்வர் யோகி ஆதித்யநாத் பிறப்பித்துள்ளார். மேலும், வரவிருக்கும் பண்டிகைகளின் போது அமைதியை நிலைநாட்ட அடுத்த 24 மணி நேரத்திற்குள் மதத் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு காவல் நிலையம் முதல் ஏடிஜி வரையிலான அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

பதற்றமான பகுதிகளில் கூடுதல் காவலர் படைகளை நிறுத்துதல், நிலைமையைக் கண்காணிக்க ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்துதல் மற்றும் காவல்துறை  வாகனங்கள் செயலில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com