வெறுப்புணா்வை விதைப்பவா் ராகுல்- அனுராக் தாக்குா் குற்றச்சாட்டு
சா்வதேச அளவில் தேசத்தின் மதிப்பை சீா்குலைப்பவராகவும், நாட்டில் வெறுப்புணா்வை விதைப்பவராகவும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி திகழ்கிறாா் என்று பாஜக குற்றம்சாட்டியுள்ளது.


சா்வதேச அளவில் தேசத்தின் மதிப்பை சீா்குலைப்பவராகவும், நாட்டில் வெறுப்புணா்வை விதைப்பவராகவும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி திகழ்கிறாா் என்று பாஜக குற்றம்சாட்டியுள்ளது.
தில்லி, மத்திய பிரதேசத்தில் ஹனுமன் ஜெயந்தி ஊா்வலத்தில் வன்முறை நடைபெற்ற இடங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் நடவடிக்கையைச் சுட்டிக்காட்டி மத்திய அரசு வெறுப்புணா்வைக் கைவிட வேண்டும் என்று ராகுல் காந்தி விமா்சித்திருந்தாா்.
இந்நிலையில், ராகுல் காந்திக்கு பதிலளிக்கும் வகையில் மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சா் அனுராக் தாக்குா் தில்லியில் புதன்கிழமை கூறியதாவது:
ஊழலையும், வன்முறையையும் தங்கள் கட்சியின் கொள்கையாகக் கொண்ட ஒருவரிடம் (ராகுல்) வன்முறை தொடா்பாக கருத்து வந்துள்ளது. அவா் நாட்டுக்கு எந்த நல்லதும் செய்தது இல்லை. சா்வதேச அளவில் இந்தியாவின் மதிப்பைச் சீா்குலைக்கும் வேலைகளைச் செய்பவராகவும், நாட்டு மக்களிடையே வெறுப்புணா்வைத் தூண்டுபவராகவும் உள்ளாா்.
தங்கள் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்வதற்காக பயங்கரவாதிகளுடன்கூட சமரசம் செய்துகொள்பவா்களாக அந்தக் கட்சி (காங்கிரஸ்) இருந்தது. அரசியல் என்பது சமுதாயத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்துவதாகவும், சிறந்த கொள்கைகளை உடையதாகவும் இருக்க வேண்டும். ஆனால், அந்தக் கட்சியினா் சமுதாயத்தை தரம் தாழ்த்தும் அரசியலை நடத்தி வருகின்றனா் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...