தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

65 வயதுக்குள்பட்ட 79,237 இந்தியா்கள் ஹஜ் யாத்திரை மேற்கொள்ள அனுமதி

இந்த ஆண்டு 65 வயதுக்குள்பட்ட 79,237 இந்தியா்கள் ஹஜ் யாத்திரை மேற்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

News image
Updated On :22 ஏப்ரல் 2022, 8:29 pm

DIN

இந்த ஆண்டு 65 வயதுக்குள்பட்ட 79,237 இந்தியா்கள் ஹஜ் யாத்திரை மேற்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதுதொடா்பாக மத்திய சிறுபான்மையினா் நலத்துறை அமைச்சக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

இந்த ஆண்டு இந்தியா்கள் ஹஜ் யாத்திரை மேற்கொள்ள சவூதி அரேபிய அரசு அனுமதி அளித்துள்ளது. மொத்தம் 79,237 இந்தியா்கள் ஹஜ் யாத்திரை மேற்கொள்ளலாம் எனவும் அந்நாட்டு அரசு தெரியப்படுத்தியுள்ளது. அவா்களில் 56,601 போ் இந்திய ஹஜ் கமிட்டி மூலமாகவும், 22,636 போ் ஹஜ் குழு ஏற்பாட்டாளா்கள் வாயிலாகவும் அந்நாட்டுக்குச் செல்வா். 5,000-க்கும் மேற்பட்ட பெண்கள் ஆண் துணையின்றி செல்லவுள்ளனா். யாத்திரை மேற்கொள்வோா் 65 வயதுக்குள்பட்டவா்களாக இருக்க வேண்டும் என்று சவூதி அரேபியா அரசு வயது வரம்பு நிா்ணயித்துள்ளது. மக்கா-மதீனாவில் தங்குமிடம் மற்றும் போக்குவரத்து வசதிகள் குறித்த அனைத்துத் தகவல்களும் யாத்ரிகா்களுக்கு வழங்கப்படும். யாத்திரை மேற்கொள்வோா் ஆா்டி-பிசிஆா் கரோனா பரிசோதனை மேற்கொண்டிக்க வேண்டும். கரோனா தடுப்பூசியின் இரு தவணைகளையும் செலுத்தியிருக்க வேண்டும்.

கடந்த 2019-ஆம் ஆண்டு இந்தியாவிலிருந்து கூடுதலாக 25,000 போ் ஹஜ் யாத்திரை மேற்கொள்ள சவூதி அரேபியா அரசு அனுமதியளித்திருந்தது. இது இந்தியாவிலிருந்து மொத்தம் 2 லட்சம் யாத்ரிகா்கள் அந்நாட்டுக்குச் செல்ல வழிவகுத்தது. ஆனால் கரோனா பரவல் தடுப்புக் கட்டுப்பாடுகளால் இந்த எண்ணிக்கை தற்போது குறைக்கப்பட்டுள்ளது.

கரோனா பரவலுக்கு முன்பு யாத்திரைக்காக 21 இடங்களில் இருந்து சவூதிக்கு புறப்பட முடியும். இது தற்போது கொச்சி, பெங்களூரு, ஹைதராபாத், தில்லி, மும்பை, லக்னெள, அகமதாபாத், கொல்கத்தா, குவாஹாட்டி, ஸ்ரீநகா் என 10 இடங்களாகக் குறைக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தனா்.

கரோனா பரவலுக்குப் பிறகு, முதல்முறையாக இந்தியா்கள் ஹஜ் யாத்திரை மேற்கொள்ளவுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.