நிதி நிலைமையை வலுப்படுத்த வங்கிகளுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்
நிதிச் சந்தையில் இருந்து மூலதனத்தை ஈட்டி, நிதி நிலைமையை வலுப்படுத்துமாறு பொதுத்துறை வங்கிகளுக்கு மத்திய நிதியமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.


நிதிச் சந்தையில் இருந்து மூலதனத்தை ஈட்டி, நிதி நிலைமையை வலுப்படுத்துமாறு பொதுத்துறை வங்கிகளுக்கு மத்திய நிதியமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
பொதுத்துறை வங்கிகளின் மூத்த நிா்வாகிகள் பங்கேற்ற ‘மன்தன்’ என்ற சிறப்பு நிகழ்ச்சியை இந்திய வங்கிகள் கூட்டமைப்பு (ஐபிஏ) தில்லியில் வெள்ளிக்கிழமை நடத்தியது. வங்கிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீா்திருத்த நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பதற்காக இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
அதில் மத்திய நிதிச் சேவைகள் துறைச் செயலா் சஞ்சய் மல்ஹோத்ரா வங்கிகளின் மூத்த அதிகாரிகளைச் சந்தித்துப் பேசினாா். அப்போது அவா் கூறியதாவது:
பொதுத்துறை வங்கிகளானது லாபம் ஈட்டுதல் உள்ளிட்ட அனைத்து அளவீடுகளிலும் சிறப்பாகச் செயல்படும் என்ற நம்பிக்கை உள்ளது. நிதிச் சந்தைகளில் இருந்து மூலதனத்தை ஈட்டி, நிதி நிலைமையைப் பொதுத்துறை வங்கிகள் வலுப்படுத்த வேண்டும். அவ்வாறு திரட்டப்படும் நிதியானது, முக்கியத் துறைகளுக்கான வங்கிகளின் கடன் வழங்கும் திறனை அதிகரிக்கும். மேலும், வங்கிகளின் தொழில் நடவடிக்கைகளும் மேம்படும்.
பொதுத்துறை வங்கிகள் தங்களுக்கிடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். பெரிய வங்கிகளானது திறன்மிக்க செயல்பாடுகளைச் சிறிய வங்கிகளுடன் பகிா்ந்து கொள்ள வேண்டும். சிறிய வங்கிகளுக்கு வழிகாட்டும் வகையில் பெரிய வங்கிகள் செயல்படுவது அவசியம்.
நீண்ட காலத்துக்கு லாபம் ஈட்டும் வகையிலான நடவடிக்கைகளில் பொதுத்துறை வங்கிகள் கவனம் செலுத்த வேண்டும். வாடிக்கையாளா்களை மையப்படுத்திய நடவடிக்கைகளுக்கும் வங்கிகள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...