மனைவியைக் கருவுறச் செய்ய 15 நாள்கள் பரோல்...ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் உத்தரவு

கணவர் சிறையில் இருப்பதால், மனைவின் பாலியல் மற்றும் உணர்வுப்பூர்வமான தேவைகள் பாதிக்கப்பட்டிருப்பதாக நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

மனைவியைக் கருவுறச் செய்ய கணவருக்கு 15 நாள்கள் பரோல் வழங்கி ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தின் ஜோத்பூர் கிளை இந்த உத்தரவை வழங்கியுள்ளது.

குழந்தை பெற்ற கொள்ள உரிமை உள்ளதாகக் கூறி நந்த லாலா என்பவரின் மனைவி ரேகா தாக்கல் செய்த மனுவை சந்தீப் மேத்தா, ஃபர்ஜந்த் அலி ஆகியோர் கொண்ட அமர்வு விசாரணை செய்து இந்த உத்தரவை அளித்துள்ளது.

"நந்த லாலாவின் மனைவி அப்பாவி. கணவர் சிறையில் இருப்பதால், அவரின் பாலியல் மற்றும் உணர்வுப்பூர்வமான தேவைகள் பாதிக்கப்பட்டிருக்கிறது" என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். 

மனுவை விசாரித்த நீதிபதிகள், "எந்த கோணத்திலிருந்து பார்த்தாலும், அசாதாரண சூழல் ஒவ்வொறு வழக்குகளையும் கருத்தில் கொண்டு பார்க்கும் போதும், குழந்தையை பெற்று கொள்வதற்கான உரிமை அல்லது விருப்பம் சிறைவாசிகளுக்கும் உண்டு என்பது தெளிவாகிறது. குற்றவாளிகள் அல்லது சிறைவாசிகள் ஆகியோரது இணையரின் குழந்தை பெற்று கொள்ளும் உரிமையை பறிப்பது சரி அல்ல" என்றனர்.

ரிக் வேதம் உள்பட இந்து மதத்தின் புராணங்களையும் யூதம், கிறிஸ்தவம் உள்ளிட்ட மத கோட்பாடுகளையும் மேற்கோள் காட்டிய நீதிமன்றம், "மத ரீதியாக பார்க்கும்போதும் இந்து மத தத்துவத்தின்படி, குழந்தையை பெற்று கொள்வதே 16 சடங்குகளில் முதன்மையானது. அடுத்தடுத்த சந்ததிகளை தோற்றுவிப்பதன் முக்கியத்துவத்தை இஸ்லாமிய ஷரியத் சட்டம் எடுத்துரைக்கிறது. 

சட்ட ரீதியாகவும் அரசியலமைப்பு சட்டம் 21 இன்படி ஒருவர் குழந்தை பெற்று கொள்வது அடிப்படை உரிமை என கூறுகிறது. எனவே, ஒருவரின் தனிப்பட்ட சுதந்திரத்திலும் வாழ்க்கையிலும் யாரும் தலையிட கூடாது. இதை அரசியலமைப்பு உறுதி செய்கிறது" என தெரிவித்துள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு, ராஜஸ்தான் பில்வாரா நீதிமன்றம், நந்த லாலாவுக்கு ஆயுள் தண்டனை வழங்கி உத்தரவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com