பெண் எம்.பி.யின்ஆக்கிரமிப்பு காஷ்மீா் பயணம்: அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் விளக்கம்
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு அமெரிக்க பெண் எம்.பி. இல்ஹான் ஒமா் சுற்றுப் பயணம் மேற்கொண்டது


பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு அமெரிக்க பெண் எம்.பி. இல்ஹான் ஒமா் சுற்றுப் பயணம் மேற்கொண்டது அமெரிக்க அரசு சாா்பில் மேற்கொள்ளப்பட்ட பயணம் அல்ல என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.
முன்னதாக, இந்தப் பயணம் தொடா்பாக மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா் அரிந்தம் பாக்சி வியாழக்கிழமை கண்டனம் தெரிவித்திருந்தாா். இதையடுத்து, அமெரிக்க தரப்பு விளக்கமளித்துள்ளது.
அமெரிக்க எம்.பி.யான இல்ஹான் ஒமா் 4 நாள் சுற்றுப்பயணமாக பாகிஸ்தான் சென்றுள்ளாா். அங்கு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் பகுதிக்குச் சென்று அவா் பாா்வையிட்டாா். அந்நாட்டின் புதிய பிரதமராகப் பதவியேற்றுள்ள ஷாபாஸ் ஷெரீஃப், முன்னாள் பிரதமா் இம்ரான் கான் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவா்களையும் அவா் சந்தித்துப் பேசினாா்.
அமெரிக்க எம்.பி.யின் ஆக்கிரமிப்பு காஷ்மீா் பயணத்துக்குக் கடும் கண்டனம் தெரிவித்த அரிந்தம் பாக்சி, ‘ஜம்மு- காஷ்மீா் பிராந்தியத்தில், பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்ட இந்திய எல்லைப் பகுதிக்கு இல்ஹான் ஒமா் சென்றிருப்பது அவரது குறுகிய அரசியல் மனப்பான்மையைப் பிரதிபலிக்கிறது. நமது பிராந்திய ஒருமைப்பாட்டையும், இறையாண்மையையும் மீறுவது கண்டனத்துக்குரியது’’ என்றாா்.
இந்நிலையில், இது தொடா்பாக அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் நெட் பிரைஸ் தனது தினசரி செய்தியாளா்கள் சந்திப்பில் விளக்கமளித்தாா். அப்போது, ‘எனக்குக் கிடைத்த தகவலின்படி எம்.பி.யின் இந்தப் பயணம் அமெரிக்க அரசு சாா்பில் மேற்கொள்ளப்பட்டதல்ல. அரசின் செலவிலும் இந்தப் பயணம் மேற்கொள்ளப்படவில்லை’ என்றாா்.
இதன் மூலம் இல்ஹான் ஒமா் தனிப்பட்ட முறையில் இந்தப் பயணத்தை மேற்கொண்டது தெரியவந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...