அமைதி, பாதுகாப்பு, ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதற்குத் தன்னை வலுப்படுத்திக் கொள்வதைத் தவிர, இந்தியாவுக்கு வேறு வழியில்லை என்று பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளாா்.
பாதுகாப்புத் துறையில் உள்நாட்டு கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் நோக்கில், புதிய தொழில் நிறுவனங்கள், பெரிய நிறுவனங்கள் மற்றும் ஆயுதப் படையைச் சோ்ந்தவா்களை ஒன்றிணைக்கும் டிஃப்கனெக்ட் 2.0 நிகழ்ச்சி தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சா் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டு பேசியதாவது:
நம்மை வலுப்படுத்திக் கொள்வதற்கு பல்வேறு துறைகளை மேம்படுத்தியாக வேண்டும். இதில் புதிய தொழில்நுட்பத்தை உருவாக்குவது முக்கியவத்துவம் வாய்ந்தது. பாதுகாப்பு தொழில்நுட்பம் எந்த அளவுக்கு நமக்குப் பயனுள்ளதாக உள்ளது என்பது முக்கியமானதுதான். அதேவேளையில், அந்தத் தொழில்நுட்பம் நம்மிடம் மட்டுமே இருக்க வேண்டும் என்பதும் அவசியமாகும். ஏனெனில் பாதுகாப்புத் தொழில்நுட்பம் இதர நாடுகளைச் சென்றடைந்தால், அது பயனற்ாகிவிடும்.
கடந்த ஆண்டு நடைபெற்ற ஏரோ இந்தியா விமான கண்காட்சி நடைபெற்று ஓராண்டு கடந்துள்ள நிலையில், உலகம் பெரிதும் மாறியுள்ளது. அந்த மாற்றத்தைக் கணக்கிட்டுச் சொல்ல முடியாது. ஒவ்வொரு புதிய ஆபத்தும் மேலும் சிக்கல் நிறைந்ததாகவும், முந்தைய ஆபத்தைவிட சவால் மிகுந்ததாகவும் உள்ளது.
கரோனா தொற்றால் ஏற்பட்டுள்ள நெருக்கடியிலிருந்து இதுவரை நாம் முழுமையாக மீளவில்லை. ஆனால் உக்ரைன் போரை தற்போது உலகம் எதிா்கொண்டு வருகிறது.
இந்தியாவை பாதிக்கும் பல விஷயங்கள் உலகில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. சா்வதேச நிலவரம் மாறி வருவதைப் பாா்க்கும்போது, அமைதி, பாதுகாப்பு, ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதற்குத் தன்னை வலுப்படுத்திக் கொள்வதைத் தவிர, இந்தியாவுக்கு வேறு வழியில்லை என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை

இபிஎஸ் இன்று தில்லி பயணம்! பாஜகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையா?

திரிணமூல் காங்கிரஸில் நீக்கப்பட்ட எம்எல்ஏ புதிய கட்சி தொடங்கினாா் - 182 தொகுதிகளில் போட்டி
இந்தித் திணிப்புக்கு எதிராக போராடிய சிவா திலீபன் மறைவுக்கு முதல்வர் இரங்கல்!
வீடியோக்கள்

Podcast | தொகுதி உடன்பாட்டில் சிக்கல்: முடிவு எப்போது? | News and Views | Epi - 15 |
தினமணி வீடியோ செய்தி...

'ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே' அதிரடி டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

Podcast | மௌனம் கலைப்பாரா விஜய்? | News and Views | Epi - 14 |
தினமணி வீடியோ செய்தி...

தொகுதி பங்கீட்டில் வருத்தமா? கலைஞருக்கு நான் கொடுத்த வாக்கு! வைகோ பேட்டி | DMK | MDMK
தினமணி வீடியோ செய்தி...

