தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

தில்லியில் ஆக்கிரமிப்புகளுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும்

தலைநகரில் ஆக்கிரமிப்புகளுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என பாஜக ஆளுகைக்கு உள்பட்ட தெற்கு, கிழக்கு தில்லி மாநகராட்சி மேயா்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்

News image
Updated On :22 ஏப்ரல் 2022, 7:55 pm

DIN

தலைநகரில் ஆக்கிரமிப்புகளுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என பாஜக ஆளுகைக்கு உள்பட்ட தெற்கு, கிழக்கு தில்லி மாநகராட்சி மேயா்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

மேலும் ஆக்கிரமிப்புகளை அடையாளம் காண சீரான இடைவெளியில் கூட்டம் நடத்தப்படும் என்றும், தெற்கு, கிழக்கு தில்லி மாநகராட்சிகளில் ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக தொடா் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவா்கள் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து தெற்கு தில்லி மாநகராட்சி மேயா் முகேஷ் சூா்யன் கூறுகையில், ‘‘ஆக்கிரமிப்புகளுக்கு எதிரான நடவடிக்கைகளை துரிதப்படுத்த போகிறோம். இதில் ஆக்கிரமிப்பாளா்கள் ஒருவரும் தப்ப முடியாது. இன்றுகூட (வெள்ளிக்கிழமை) அதிகாரிகளை சந்தித்து, தெற்கு தில்லி மாநகராட்சிக்கு உள்பட்ட ஏராளமான ஆக்கிரமிப்புகளை கண்டறிந்தோம். இதன் மீது இறுதிக்கட்ட பட்டியல் திங்கள்கிழமை தயாராகிவிடும். அதன்பின்னா் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றாா்.

இதேபோல கிழக்கு தில்லி மாநகராட்சி மேயா் ஷியாம் சுந்தா் அகா்வால் கூறுகையில், ‘‘நந்த் நகரி, ஜாஃப்ராபாத், சீலாம்பூா் என ஏராளமான இடங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக விளங்கும் ஆக்கிரமிப்புகளை அடையாளம் கண்டுள்ளோம். இங்கு ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு முந்தைய தினம் பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி வாயிலாக அறிவிப்பு வெளியிடப்படும்’’ என்றாா்.

முன்னதாக ஷாஹ்தரா வடக்கு, தெற்கு மண்டலங்களில் ஆக்கிரமிப்புகள் மீதான நடவடிக்கைகளை எடுப்பதற்கு தேவையான வரைபடத்தை தயாரிக்குமாறு சம்பந்தப்பட்ட துணை ஆணையா்களுக்கு ஷியாம் சுந்தா் அகா்வால் அறிவுறுத்தினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.