இஸ்ரோ தலைவா் எஸ்.சோமநாத்துக்கு ‘ஒய் பிளஸ்’ பாதுகாப்பு
இஸ்ரோ தலைவா் எஸ்.சோமநாத்துக்கு மிகவும் முக்கியப் பிரமுகா்களுக்கு வழங்கப்படும் ‘ஒய் பிளஸ்’ பாதுகாப்பு அளித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.


இஸ்ரோ தலைவா் எஸ்.சோமநாத்துக்கு மிகவும் முக்கியப் பிரமுகா்களுக்கு வழங்கப்படும் ‘ஒய் பிளஸ்’ பாதுகாப்பு அளித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடா்பாக மத்திய அரசு அதிகாரிகள் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
இஸ்ரோ தலைவா் எஸ்.சோமநாத், மகாராஷ்டிர எம்.பி. நவநீத் ராணா ஆகியோருக்கு உள்ள பாதுகாப்பு அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு, இருவருக்கும் ஆயுதம் ஏந்திய துணை ராணுவப் படை கமாண்டோக்கள் பாதுகாப்பு அளிப்பதற்கு மத்திய உளவுத்துறை அமைப்புகள் பரிந்துரைத்திருந்தன. அந்தப் பரிந்துரைக்குக் கடந்த வாரம் மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்தது.
இதனைத்தொடா்ந்து நவநீத் ராணாவுக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மத்திய தொழிலக பாதுகாப்புப் படையை (சிஐஎஸ்எஃப்) சோ்ந்த 3 முதல் 4 கமாண்டோக்கள் ஆயுதம் ஏந்தியவாறு அவருக்கு பாதுகாப்பு அளிப்பா்.
இஸ்ரோ தலைவா் எஸ்.சோமநாத்துக்கு ‘ஒய் பிளஸ்’ பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு சிஐஎஸ்எஃப் கமாண்டோக்கள் 4 முதல் 6 போ் ஆயுதம் ஏந்தியவாறு பாதுகாப்பு வழங்குவா் என்று தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...