ஜம்மு-காஷ்மீர் லாலியன் பகுதியிலுள்ள விவசாய நிலத்தில் சந்தேகத்திற்குரிய வகையில் வெடித்தது வெடிகுண்டா? என்ற நோக்கத்தில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு முதல் முறையாக பிரதமர் நரேந்திர மோடி ஜம்மு-காஷ்மீர் செல்லவுள்ள நிலையில், லாலியன் பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் வெடிகுண்டு வெடித்தது.
தேசிய உள்ளாட்சி அமைப்பு தினத்தையொட்டி ஜம்மு-காஷ்மீருக்கு ஞாயிற்றுக்கிழமை (ஏப். 24) பிரதமா் நரேந்திர மோடி செல்கிறார். அங்கு ரூ. 20,000 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்ட உள்ளாா்.
மேலும், ரூ. 3,100 கோடி மதிப்பில் ஜம்மு - காஷ்மீா் பிராந்தியங்களுக்கு இடையேயான பயண நேரத்தை வெகுவாக குறைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள 16 கி.மீ. தொலைவு பனிஹல் - காசிகுண்ட் சுரங்கப் பாதையை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவைக்க உள்ளாா்.
பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு பிரதமர் அங்கு செல்வதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
பிரதமரின் பயணத்தைத் தடுக்கும் வகையில், பாதுகாப்புப் படை வீரர்கள் செல்லும் பேருந்து மீது நேற்று தாக்குதல் நடத்தப்பட்டது. ராணுவத்தினரின் பதிலடி மூலம் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் ஜம்முவிலுள்ள லாலியன் பகுதியைச் சேர்ந்த விவசாய நிலத்தில் சந்தேகத்திற்குரிய வகையில் வெடிச்சத்தம் கேட்டுள்ளது. பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில் சம்பவ இடத்தில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மின்னல் தாக்கியதா அல்லது புதைத்து வைத்திருந்த இரும்புத் துண்டு வெடித்துச் சிதறியதா என்ற நோக்கத்தில் முதல்கட்ட விசாரணை மேற்கொண்டுள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஒரே நாள்.. அதே ஆள்கள்... இருவேறு கட்சிகள்!

ராணிப்பேட்டை மாவட்ட வணிகா் சங்க பேரமைப்பு நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

தோ்தல் அலுவலா்களால் பாழாகும் பள்ளி சுவா்கள்?

ஓமலூா் தொகுதி: இரட்டை இலையா? முரசா? அதீத நம்பிக்கையால் மாறும் களம்!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

