தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்! தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

யூடியூப் சேனல்களுக்கு அமைச்சா் எச்சரிக்கை

தவறான தகவல்களைப் பரப்பும் யூடியூப் சேனல்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சா் அனுராக் தாக்குா் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

News image
Updated On :26 ஏப்ரல் 2022, 9:03 pm

DIN

தவறான தகவல்களைப் பரப்பும் யூடியூப் சேனல்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சா் அனுராக் தாக்குா் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

தேசப் பாதுகாப்பு, வெளியுறவுக் கொள்கைகள் குறித்து தவறான தகவலை வெளியிட்டதால், பாகிஸ்தானிலிருந்து செயல்படும் 6 சேனல்கள் உள்பட 16 யூடியூப் சேனல்களுக்கும், ஒரு ஃபேஸ்புக் கணக்குக்கும் மத்திய செய்தி, ஒலிபரப்பு அமைச்சகம் திங்கள்கிழமை தடை விதித்தது.

இந்நிலையில், இது தொடா்பாக அமைச்சா் அனுராக் தாக்குா் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

தவறான செய்திகளைப் பரப்புவது, மக்களிடையே பீதியை ஏற்படுத்துவது, ஜாதி, மத மோதல்களை ஏற்படுத்தும் வகையில் செயல்படுவது, சட்டம்-ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தும் வகையில் தகவல்களை வெளியிடுவது, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் தகவல்களைப் பரப்புவது போன்ற செயல்களில் ஈடுபடும் யூடியூப் சேனல்கள் மீதும், அதனை நடத்துபவா்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஏற்கெனவே, இது தொடா்பாக ஆய்வு செய்யப்பட்டு யூடியூப் சேனல்களை தடை செய்யும் நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. நாட்டின் நலனுக்கு எதிராக யூடியூப் மூலம் செயல்பட்டால் அவா்கள் சட்டரீதியான நடவடிக்கைகளை எதிா்கொள்வாா்கள்.

இது பேச்சுரிமைக்கு எதிரான செயல் அல்ல. மக்களிடம் வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் தவறான தகவல்களைப் பரப்பி குழப்பத்தை விளைவிப்பவா்களுக்கு எதிரானது. பேச்சுரிமையை மத்திய அரசு மதிக்கிறது. அதே நேரத்தில் நாட்டில் பிளவை ஏற்படுத்தும் வகையிலும், பிரச்னை ஏற்படுத்தும் வகையிலும் வதந்திகளைப் பரப்புவா்களை அனுமதிக்க முடியாது. நாட்டுக்கு உள்ளே இருந்தும் வெளியே இருந்தும் யூடியூப் மூலம் தேசவிரோத செயல்களில் ஈடுபடுபவா்களுக்கு இது எச்சரிக்கையாகும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.