தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

தெலங்கானா: போதைக்கு அடிமையான மகனை பெற்றோரே கொன்ற பரிதாபம்

மது மற்றும் போதைக்கு அடிமையான மகனின் தினமும் அனுபவிக்கும் துன்பத்தை தாங்க முடியாமல், தெலங்கானாவில் தம்பதியினர்

News image

கோப்புப்படம்

Updated On :26 ஏப்ரல் 2022, 12:34 pm IST

ஹைதராபாத்: மது மற்றும் போதைக்கு அடிமையான மகனின் தினமும் அனுபவிக்கும் துன்பத்தை தாங்க முடியாமல், தெலங்கானாவில் தம்பதியினர் அவர்களது மகனின் கழுத்தை நெரித்து கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் திங்கள்கிழமை ராஜண்ணா சிர்சில்லா மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது.

பாலையா கவுட் மற்றும் அவரது மனைவி லாவண்யா ஆகியோர் தங்கள் மற்ற இரண்டு மகன்களின் உதவியுடன், மகனை  நிகில்(23) கொலை செய்தனர்.

ஹைதராபாத்தில் இருந்து சுமார் 160 கிமீ தொலைவில் உள்ள கோனாரோபேட் மண்டலத்தின் தர்மராம் கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

நிகில் மதுவுக்கும், போதைக்கும் அடிமையாகிவிட்ட நிலையில், அவர் உருவாக்கும் பிரச்னைகளால் அவரது பெற்றோர் மனவேதனையில் இருந்தனர். நிகில், அவர்களது பெற்றோர் உடன் தினமும் தகராறு செய்து வன்முறையில் ஈடுபட்டு வந்தார்.

காவல்துறை அதிகாரியான நிகில்  மலேசியாவில் மூன்று ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஊர் திரும்பிய இவர், ஓட்டுநர் வேலை பார்த்து வந்தார். அவர் குடிப்பழக்கம் மற்றும் போதைப்பொருளுக்கு அடிமையானதால், அவரது பெற்றோர் ஆலோசனை செய்யக் கோரி காவல்துறையை அணுகினர்.

ஆனால், காவல்துறையின் ஆலோசனையில் அவருக்கு எந்த மாற்றமும் ஏற்படவில்லை. திங்கள்கிழமை நிகில் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து தந்தையுடன் சண்டை போட்டுள்ளார்.

பாலையா கவுட் நிகிலை திட்டியதால், ஆத்திரமடைந்த நிகில், ஆயுதம் கொண்டு அவரை சரமாரியாக தாக்க முயன்றார். கவுட் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள குதித்து விட்டார். பின்னர் அதே ஆயுதத்தால் தனது மகனைத் தாக்கி காயப்படுத்தினார்.

அவர் மீண்டும் தாக்கிவிடுவாரோ என்ற அச்சத்தில், அவரது பெற்றோரும், வம்சி, அஜய் ஆகிய இரு சகோதரர்களும் அவரின் கழுத்தை இறுக்கிப் பிடித்தனர். நிகிலின் பெற்றோர் கழுத்தில் கயிறு போட்டு கழுத்தை நெரித்து கொன்றனர்.

கிராம வருவாய் அலுவலர் (விஆர்ஓ) அளித்த புகாரின் பேரில், நான்கு பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக வட்ட ஆய்வாளர் ஸ்ரீலதா தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.