புது தில்லி: மாநில ஆளுநர், குடியரசுத் தலைவரின் அதிகாரங்களுக்குள் போகாமல் பேரறிவாளனை நாங்களே ஏன் விடுவிக்கக் கூடாது? என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலும், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் தன்னை விடுவிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பேரறிவாளன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை இன்று விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், பேரறிவாளனை விடுதலை செய்வதே இந்த வழக்கை முடித்துவைக்க ஒரே தீர்வு என்று குறிப்பிட்டனர்.
மேலும், மத்திய அரசுக்கும் ஆளுநரின் அதிகாரம் குறித்தும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் காரசார கேள்விகளை நீதிமன்றத்தில் எழுப்பினர்.
சொந்தக் கண்ணோட்டத்தில் செல்ல ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்று கூறியிருக்கும் நீதிபதிகள், ஆளுநரின் அதிகாரங்கள் குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
வழக்கு விசாரணையின் போது நீதிபதிகள் கூறியிருப்பதாவது, மாநில அமைச்சரவை அனுப்பக் கூடிய பரிந்துரைகளை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப ஆளுநருக்கு என்ன அதிகாரம் உள்ளது?
பேரறிவாளன் விவகாரத்தில் ஆளுநரின் பதில் ஒவ்வொரு முறையும் முரணாகவே உள்ளது. ஆளுநர், குடியரசுத் தலைவரின் அதிகாரங்களுக்குள் போகாமல் பேரறிவாளனை நாங்களே ஏன் விடுவிக்கக் கூடாது?
மாநில அமைச்சரவையின் ஒவ்வொரு முடிவுக்கும் எதிராக ஆளுநர் செயல்பட்டால், அது கூட்டாட்சி அமைப்பில் மிகப்பெரிய பாதகத்தை ஏற்படுத்தும். மாநில ஆளுநர் அமைச்சரவை முடிவுக்கு எதிராக சொந்தக் கண்ணோட்டத்தில் செல்ல முடியாது என்றும் குறிப்பிட்டனர்.
மேலும், பேரறிவாளனை விடுவிப்பது தொடர்பான தனது நிலைப்பாட்டை மத்திய அரசு ஒரு வாரத்தில் தெரிவிக்க வேண்டும் என்றும், பேரறிவாளன் வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தயார் நிலையில் வைத்திருக்க தமிழக அரசுக்கும், வழக்குரைஞருக்கும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம் நிராகரிப்பு!

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் 3 சதவீதத்திற்கும் மேல் சரிவு!

சஞ்சு சாம்சன் மிகவும் அபாயகரமான வீரர்: சிஎஸ்கே பயிற்சியாளர்

நேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!
வீடியோக்கள்

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை

சூப்பர் கேர்ள் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


