தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

தில்லி குப்பைக் கிடங்கில் 36 மணிநேரமாக தொடர்ந்து எரியும் தீ

வடக்கு தில்லியில் பல்ஸ்வா குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்ந்து 36 மணிநேரமாக எரிந்து வருகின்றது.

News image
Updated On :28 ஏப்ரல் 2022, 2:51 am

DIN

வடக்கு தில்லியில் பல்ஸ்வா குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்ந்து 36 மணிநேரமாக எரிந்து வருகின்றது.

தில்லியின் வடக்குப் பகுதியில் பல்ஸ்வா குப்பைக் கிடங்கில் திங்கள்கிழமை மாலை 5.47 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து 13 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயினை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.

தீ விபத்து ஏற்பட்டு 36 மணிநேரத்தை கடந்த நிலையில், சில இடங்களில் தீயை கட்டுக்குள் கொண்டு வந்த போதியில், இன்னும் சில இடங்களில் தீ எரிந்து வருகின்றது.

இதனால், கரும்புகை ஏற்பட்டு சுற்றுப்புறங்களில் வசிக்கும் மக்கள் மூச்சுவிட சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

Story image

இதற்கிடையே, விபத்து ஏற்பட்ட பகுதியில் உள்ள ஞான சரோவர் பள்ளிக்கு ஒரு வாரம் விடுமுறை விடப்படுவதாக பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.

Story image

முன்னதாக, இந்த தீ விபத்து சம்பவம் குறித்து தில்லி மாசுக் கட்டுப்பாட்டுக் குழு விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்க தில்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் உத்தரவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.