தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

தில்லியில் அதிகரிக்கும் கரோனா: மேலும் 1,607 பேருக்குத் தொற்று

தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,607 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். 

News image
Updated On :30 ஏப்ரல் 2022, 10:36 am

DIN

தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,607 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். 

சனிக்கிழமை காலை சுகாதாரத்துறை வெளியிட்ட தரவுகளின்படி, 

தேசிய தலைநகரில் புதிதாக பதிவான வழக்குகளையடுத்து,  ஒட்டுமொத்த பாதிப்பு 18,81,555 ஆக அதிகரித்துள்ளது.

அதேநேரத்தில் 2 கரோனா உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன. இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 26,174 ஆக உள்ளது.  தலைநகரில் இறப்பு விகிதம் 1.39 சதவீதமாக உள்ளது. 

மருத்துவச் சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 5,609 ஆக உயர்ந்துள்ளது. நேர்மறை விகிதம் 5.28 சதவீதத்தை எட்டியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 1,246 பேர் குணமடைந்துள்ள நிலையில், மொத்த எண்ணிக்கை 18,49,772 ஆக அதிகரித்துள்ளது.

வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெறும் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கையும் 3,863 ஆக உயர்ந்துள்ளது.

நகரில் கரோனா கட்டுப்பாட்டு மண்டலங்களின் எண்ணிக்கை 632 ஆக உயர்ந்துள்ளது. 

தேசிய தலைநகரில் கடந்த 24 மணி நேரத்தில் குறைந்தது 60,287 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.