நாட்டில் இதுவரை 188.89 கோடி கரோனா தடுப்பூசிகள் டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை சனிக்கிழமை அளித்துள்ள தரவுகளின்படி,
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் (இன்று காலை 7 மணி வரை) 2,31,86,439 தடுப்பூசி மையங்கள் மூலம் இதுவரை மொத்தம் 1,88,89,90,935 (188.89 கோடி) தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளது.
12-14 வயதிற்குள்பட்ட இளம் பருவத்தினருக்கு கரோனா தடுப்பூசி மார்ச் 16 இல் தொடங்கப்பட்டது. இதுவரை, சுமார் (2,86,98,710)-க்கும் அதிகமான முதல்கட்ட தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளது.
18-59 வயதினருக்கு கடந்த ஏப்ரல் 10-ம் தேதி முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகின்றது. முதல் டோஸ் 5,84,25,991 ஆகவும், இரண்டாவது டோஸ் 4,22,40,428 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
மேலும், நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,688 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 2,755 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை (பெருந்தொற்றின் தொடக்கத்திலிருந்து) 4,25,33,377 ஆக உள்ளது.
நாட்டில் தற்போது சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 18,684 ஆகக் குறைந்துள்ளது, இது நாட்டின் மொத்த தொற்று பாதிப்பில் 0.04 சதவிகிதம் ஆகும். குணமடைந்தோர் விகிதம் தற்போது 98.74 சதவிகிதமாக உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 4,96,640 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதுவரை மொத்தம் 83,74,42,023 (83.74 கோடி) கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கேரளத்தில் தொடரும் கனமழை: 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

த்ரிஷா என்ன பிரதமரா? ஆர்.எஸ்.பாரதி விமர்சனம் | DMK | TVK
பெரிய புரமோஷன்கள் இல்லாமல் வெளியாகும் மாதவனின் ஜிடிஎன்!

ஷஃபிக் சதம், பாபர் அசாம் அசத்தல்: கடைசி டெஸ்ட்டில் பாகிஸ்தான் ஆதிக்கம்!
விடியோக்கள்

உதயநிதியை இளைய கலைஞர் ஆக்கிக்கொண்டிருக்கிறார்கள்! | R.S. Bharathi | DMK | TVK



