
வணிகப் பயன்பாட்டு சமையல் எரிவாயு சிலிண்டா் விலை ரூ.36.50 குறைந்து ரூ.2,141 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்தின் அடிப்படையில் கடந்த மே 19ஆம் தேதிக்கு பிறகு வணிகப் பயன்பாட்டு சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் 4ஆவது குறையாக குறைத்துள்ளது.
அதன்படி 19 கிலோ எடை கொண்ட இந்த வணிகப் பயன்பாட்டு சமையல் எரிவாயு சிலிண்டா் விலை ரூ.36.50 குறைந்து சென்னையில் ரூ.2,141 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேசமயம், வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.1068.50 என்ற விலையிலேயே நீடிக்கிறது. தில்லியை பொறுத்தவரை வணிகப் பயன்பாட்டு சிலிண்டா் தற்போது ரூ.1,976.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.