நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

செப். 1 முதல் முதுநிலைப் படிப்புகளுக்கான சியுஇடி தோ்வு

முதுநிலைப் படிப்புகளுக்கான பொது பல்கலைக்கழக நுழைவுத் தோ்வு (சியுஇடி) செப்டம்பர் 1 முதல் நடைபெறும் என்று பல்கலை மானியக் குழு அறிவித்துள்ளது.

News image

செப். 1 முதல் முதுநிலைப் படிப்புகளுக்கான சியுஇடி தோ்வு

Updated On :2 ஆகஸ்ட் 2022, 9:14 am

DIN


முதுநிலைப் படிப்புகளுக்கான பொது பல்கலைக்கழக நுழைவுத் தோ்வு (சியுஇடி) செப்டம்பர் 1 முதல் நடைபெறும் என்று பல்கலை மானியக் குழு அறிவித்துள்ளது.

பல்கலைக்கழக மானியக் குழுத் தலைவா் ஜெகதீஷ் குமாா் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், 2022-23-ஆம் கல்வியாண்டில் முதுநிலை படிப்புகளுக்கான சியுஇடி தோ்வு செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரையிலும், செப்டம்பர் 9ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரையிலும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதுநிலை சியுஇடி தேர்வெழுத விண்ணப்பித்திருப்பவர்களுக்கான தேர்வு மையங்கள் மற்றும் நுழைவுச் சீட்டு பதிவிறக்கம் செய்யும் தேதி உள்ளிட்ட விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.