கேரளத்தில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தகவல் தெரிவித்துள்ளார்.
உலக நாடுகளைத் தொடர்ந்து இந்தியாவிலும் குரங்கு அம்மை பாதிப்பு உறுதியானதை அடுத்து நாடு முழுவதும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக குரங்கு அம்மை பாதிப்புள்ள நாடுகளில் இருந்து வருவோர் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில், இந்தியாவில் குரங்கு அம்மை பாதிப்பு 4 ஆக இருந்த நிலையில் கேரளத்தில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | குரங்கு அம்மை பரவல்: உயா்நிலைக் குழுவை அமைத்தது மத்திய அரசு
இதுகுறித்து மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், 'ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வந்த மலப்புரத்தைச் சேர்ந்த 30 வயது நபருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் தற்போது சிகிச்சையில் இருக்கிறார். கடந்த ஜூலை 27 ஆம் தேதி அவர் ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து கோழிக்கோடு வந்துள்ளார். மேலும், அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட உள்ளது' என்று தெரிவித்தார்.
இதையடுத்து இந்தியாவில் குரங்கு அம்மை பாதிப்பு 5 ஆக உயர்ந்துள்ளது. கேரளத்தில் மொத்தம் 4 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒருவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். தில்லியில் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார்.
இதுதவிர கேரளத்தில் உயிரிழந்த ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்று இருப்பது பரிசோதனை முடிவுகளில் தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | கேரளத்தில் உயிரிழந்த இளைஞருக்கு குரங்கு அம்மை உறுதியானது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

”பெட்ரோல் பங்க் எங்கேயும் இல்லை!” ஆட்டோ ஓட்டுநர்கள் அவதி

தமிழக ஆளுநராக பொறுப்பேற்றார் கேரள ஆளுநர் ராஜேந்திர ஆர்லேகர்!

சிலிண்டர், பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு; இந்தியாவை பாதிக்குமா? - மத்திய அரசு விளக்கம்!

சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆர்ப்பாட்டம்!
வீடியோக்கள்

Valaipechu Anthanan Interview | விஜய்யிடம் இப்போது மனமாற்றம்.. | TVK Vijay | Vijay Trisha issue
தினமணி வீடியோ செய்தி...

சட்டென்று மாறுது வானிலை பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

"உங்க கனவு நிறைவேறியாச்சு! இனி மக்கள் கனவை நினைவாக்குங்கள்!": MK Stalin Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

மன அழுத்தமா? காரணங்கள் என்ன? மன நலனுக்கு என்ன செய்ய வேண்டும்?
தினமணி வீடியோ செய்தி...

