திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

அமைதியான காலம்... பாஜக வெறுப்புணர்வை பரப்புகிறது: ராகுல் காந்தி

அமைதியான காலகட்டத்திலும் மக்களிடையே பாஜக வெறுப்புணர்வை பரப்பிவருவதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சித்துள்ளது. 

News image
ராகுல் காந்தி (கோப்புப் படம்)
Updated On :3 ஆகஸ்ட் 2022, 11:14 am

DIN

இனிமையான காலகட்டத்திலும் மக்களிடையே பாஜக வெறுப்புணர்வை பரப்பிவருவதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சித்துள்ளது. 

கர்நாடகத்தில் எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சித்தராமையாவின் 75வது பிறந்தநாளையொட்டி கர்நாடகத்திற்கு ராகுல் காந்தி வருகைபுரிந்துள்ளார். 

சித்தராமையாவின் பிறந்தநாளை காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இந்தநிலையில் பிறந்தநாளையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் எம்.பி. கலந்துகொண்டார். 

அப்போது பொதுமக்கள் மத்தியில் பேசிய அவர், மாநிலங்களில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில், காங்கிரஸ் கட்சி மக்களை இணைத்து வருகிறது. ஆனால் பாஜக அரசு அதற்கு எதிர்மாறாக செயல்படுகிறது. இனிமையான காலகட்டத்திலும், வெறுப்புணர்வை ஏற்படுத்தி மக்களை பிளவுபடுத்துகிறது. 

சித்தராமையா காங்கிரஸ் ஆட்சியில் மக்களை வழிநடத்திய விதத்தை பாராட்ட வேண்டும். அவர் கர்நாடக மக்களுக்கு ஒரு பாதையை வகுத்தளித்தார். கர்நாடகத்திற்காக அவரிடம் இலக்கு இருந்தது. அந்த இலக்கு அனைவருக்குமானதாகவும் இருந்தது. இது பாஜகவில் தற்போது நாம் பார்த்து வருவதிலிருந்து முற்றிலும் மாறுபட்டது.

பிறந்த நாள் கொண்டாட்டங்களில் நான் பொதுவாக பங்கேற்பதில்லை. ஆனால் சித்தராமையாவுக்காக நான் வந்துள்ளேன். அவரை தனி மனிதராக மட்டுமல்லாமல், அவருடைய சிந்தனைகளுக்காக மிகவும் பிடிக்கும். எளிய மக்களின் மீது இரக்கமும் அன்பும் கொண்டவர் எனக் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.