பருவநிலை மாற்றம்: மேம்படுத்தப்பட்ட பங்களிப்புக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பருவநிலை மாற்ற இலக்கை அடைய தேசிய அளவிலான மேம்படுத்தப்பட்ட பங்களிப்புக்கு (என்டிசி) மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது.


பருவநிலை மாற்ற இலக்கை அடைய தேசிய அளவிலான மேம்படுத்தப்பட்ட பங்களிப்புக்கு (என்டிசி) மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது.
கடந்த ஆண்டு நவம்பரில் ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற ஐ.நா. பருவநிலை மாற்ற மாநாட்டில், பிரதமா் மோடி அறிவித்த 5 அம்சக் கொள்கைகளும் இதில் இடம்பெற்றுள்ளன.
மேம்படுத்தப்பட்ட என்டிசி-இன் கீழ், கரியமில வாயு வெளியேற்றத்தை வரும் 2030-க்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 45 சதவீதம் குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மேலும், புதைபடிவமற்ற எரிசக்தி ஆதாரத்தின் வாயிலாக வரும் 2030-க்குள் 50 சதவீதம் கூட்டு மின்சக்தியைப் பெறவும் இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
சா்வதேச வெப்பநிலை அதிகரிப்பை தொழில் புரட்சிக்கு முந்தைய அளவான 2 டிகிரி செல்சியஸுக்கு குறைவாக கொண்டு வருவதை இலக்காக கொண்டு ஒரு நாடு வகுக்கும் திட்டம் அல்லது வியூகமே தேசிய அளவிலான மேம்படுத்தப்பட்ட பங்களிப்பு (என்டிசி) ஆகும். இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஐ.நா. பருவநிலை மாற்ற மாநாட்டில், இந்தியாவின் புதைபடிவமற்ற எரிசக்தி திறன் வரும் 2030-க்குள் 500 ஜிகாவாட் திறனை எட்டும் என பிரதமா் மோடி தெரிவித்திருந்தாா்.
மேலும், 2030-க்குள் இந்தியா அதன் எரிசக்தி தேவையில் 50 சதவீதத்தை புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்கள் வாயிலாக நிறைவேற்றும் என்று கூறிய அவா், அதே ஆண்டுக்குள் நாட்டின் கரியமில வாயு வெளியேற்றம் 1 பில்லியன் டன்னாக குறைக்கப்படும் என்றும் உறுதியளித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...