ஹரியாணா மாநில காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ குல்தீப் பிஷ்னோய் பாஜகவில் இன்று இணைந்தார்.
கடந்த 2019-இல் நடைபெற்ற ஹரியாணா பேரவைத் தோ்தலில் ஆதம்பூா் தொகுதியிலிருந்து தோ்வானவா் குல்தீப் பிஷ்னோய். மறைந்த முன்னாள் முதல்வா் பஜன் லாலின் இளைய மகனான இவா், 4 முறை எம்எல்ஏ பதவியும், 2 முறை எம்.பி. பதவியும் வகித்துள்ளாா்.
ஹரியாணாவில் இந்த ஆண்டு தொடக்கத்தில் காங்கிரஸில் அமைப்புரீதியாக மாற்றங்கள் செய்யப்பட்டபோது, மாநிலத் தலைவா் பதவி தனக்கு வழங்கப்படவில்லை என்று குல்தீப் அதிருப்தி தெரிவித்திருந்தாா்.
கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற மாநிலங்களவைத் தோ்தலில் அவா் கட்சிமாறி வாக்களித்தாா். இதனால் காங்கிரஸ் வேட்பாளா் அஜய் மாக்கன் தோல்வி அடைந்தாா். இதையடுத்து, அவரது கட்சி பொறுப்புகளை பறித்து, காங்கிரஸ் நடவடிக்கை மேற்கொண்டது.
இந்தச் சூழலில், எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்வதாக குல்தீப் பிஷ்னோய், சட்டப் பேரவைத் தலைவா் ஜியான் சந்த் குப்தாவிடம் நேற்று கடிதம் அளித்தார்.
இதையடுத்து தில்லியில், ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டார் முன்னிலையில் அவர் பாஜகவில் இணைந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 1,001 பேர் பலி! 118 குழந்தைகள் கொல்லப்பட்டனர்!
இந்த வார ஓடிடி படங்கள்!

அதிமுக கூட்டணி தொகுதி பங்கீடு நிறைவு?

Youth movie review | Ken Karunas | Suraj | GV Prakash | Anishma Anilkumar
வீடியோக்கள்

Youth movie review | Ken Karunas | Suraj | GV Prakash | Anishma Anilkumar
தினமணி வீடியோ செய்தி...

தினமணி ஈகைப் பெருநாள் மலர் அறிமுக விழா
தினமணி வீடியோ செய்தி...

நாம் தமிழர் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த சீமான்!
தினமணி வீடியோ செய்தி...

"வெறுப்பு அரசியல் என்ற முள்ளை எடுக்கும் மலர்": சா.பீட்டர் அல்போன்ஸ் புகழாரம்
தினமணி வீடியோ செய்தி...

