6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சஞ்சய் ரெளத்துக்கு ஆக.8 வரை காவல் நீட்டிப்பு

சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கில் கைதான சிவசேனை மாநிலங்களவை எம்.பி. சஞ்சய் ரெளத்தை வரும் 8-ஆம் தேதி வரை அமலாக்கத் துறை காவலில் விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

News image
சஞ்சய் ரெளத்
Updated On :4 ஆகஸ்ட் 2022, 8:34 am

DIN

சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கில் கைதான சிவசேனை மாநிலங்களவை எம்.பி. சஞ்சய் ரெளத்தை வரும் 8-ஆம் தேதி வரை அமலாக்கத் துறை காவலில் விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மும்பையில் குடியிருப்பு மறுசீரமைப்புத் திட்டத்தில் நிதி முறைகேடுகள் நடைபெற்றதாக எழுந்த புகாரில், சட்டவிரோத பணப் பரிவா்த்தனைகள் குறித்து அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது. இந்த விவகாரத்தில், சஞ்சய் ரெளத், அவரது மனைவி உள்ளிட்டோா் தொடா்புடைய பணப் பரிவா்த்தனைகள் விசாரிக்கப்படுகின்றன.

இதுதொடா்பான வழக்கில் சஞ்சய் ரெளத் கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் கைது செய்யப்பட்டாா். 

அதேசமயம், சஞ்சய் ரெளத் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா், அமலாக்கத் துறையின் குற்றச்சாட்டுகள் பொய்யானவை; அரசியல் பழிவாங்கும் நோக்கம் கொண்டவை என்றாா்.

இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி, எம்.ஜி.தேஷ்பாண்டே, சஞ்சய் ரெளத்தை காவலில் வைத்து விசாரிக்கப் போதுமான அடிப்படை இருப்பதாகக் கூறி, அவரை ஆகஸ்ட் 4-ஆம் தேதி வரை அமலாக்கத் துறை காவலுக்கு அனுப்பி உத்தரவிட்டாா்.

இந்நிலையில், இன்று காவல் முடியும் நிலையில், அமலாக்கத் துறையின் கோரிக்கையை ஏற்று மேலும் 4 நாள்கள் சஞ்சய் ரௌத்தை காவலில் வைக்க மும்பை சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இதனால், வருகிற ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.