விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

பெங்களூரு: 4வது மாடியிலிருந்து குழந்தையை வீசிக் கொன்ற தாய் கைது

மனநலம் பாதிக்கப்பட்ட 4 வயது குழந்தையைப் பெற்ற தாயே 4வது மாடியிலிருந்து வீசிக் கொன்ற கொடூர சம்பவம் பெங்களூவில் அரங்கேறியுள்ளது. 

News image
Updated On :5 ஆகஸ்ட் 2022, 2:06 pm

மனநலம் பாதிக்கப்பட்ட 4 வயது குழந்தையைப் பெற்ற தாயே 4வது மாடியிலிருந்து வீசிக் கொன்ற கொடூர சம்பவம் பெங்களூவில் அரங்கேறியுள்ளது.

இந்த அதிர்ச்சி சம்பவம் பெங்களூவில் உள்ள சம்பங்கிராமநகர் பகுதியில் நேற்று (ஆகஸ்ட் 4) நிகழ்ந்துள்ளது. குழந்தையை வீசிக் கொன்ற பிறகு தாயும் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இந்த நிகழ்வு அந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. 

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த காவல் துறை விசாரணை மேற்கொள்ள மருத்துவமனைக்கு விரைந்தது. காவல் துறை விசாரணையில் குழந்தை மாடிப் படியில் இருந்து விழுந்ததாக தெரிவிக்கப்பட்டது. அதன்பின் மேற்கொண்ட விசாரணையில் திடுக்கிடும் உண்மை அவர்களுக்கு கிடைத்தது. குழந்தையை தாய் தெரிந்தே 4வது மாடியில் இருந்து தூக்கி வீசியது தெரிய வந்தது. இதனையடுத்து, அவர் மீது கொலை வழக்குப் பதிவு செய்து காவல் துறை அவரை கைது செய்தது.

இது குறித்து பெங்களூரு துணைக் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநிவாஸ் கௌதா கூறியதாவது: “ மனநலம் பாதிக்கப்பட்டுள்ள குழந்தையை தாயே மாடியிலிருந்து தூக்கி வீசிக் கொன்றுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. குழந்தையின் தாய் ஒரு பல் மருத்துவர். ஆனால், அவர் தற்போது மருத்துவம் பார்க்கவில்லை. குழந்தையின் தந்தை ஒரு மென்பொறியாளர் ஆவார். அவர் அளித்த புகாரின் அடிப்படையிலேயே காவல் துறை இந்த வழக்கை விசாரித்து வருகிறது” என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.