/

ரெப்போ வட்டி 0.5% உயர்வு! வீடு, வாகனம், தனி நபர் கடன் வட்டி விகிதம் அதிகரிக்கும்

வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை 0.5 சதவீதம் உயர்த்தி ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார்.

News image
Updated On :5 ஆகஸ்ட் 2022, 5:00 am

வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை 0.5 சதவீதம் உயர்த்தி ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார். 

இதன் மூலமாக வங்கிகளின் குறுகிய கால கடன் வட்டி விகிதம், 4.9 சதவீதத்திலிருந்து 5.4 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் இது உடனடியாக அமலுக்கு வரும் என்றும் அறிவித்துள்ளார். 

நாட்டில் பணவீக்கம் விகிதம் அதிகரித்து வருவதை அடுத்து அதை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக ரிசர்வ் வங்கி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

வங்கிகளின் குறுகிய கால கடன் வட்டி விகிதம் உயர்வை அடுத்து வீடு, வாகனம், தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரிக்கும். 

மேலும், 2022-23 ஆம் நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.2% ஆக தொடர்ந்து நீடிக்கும், 2023-24 ஆம் ஆண்டு முதல் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.7% ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதாகவும் ஆளுநர் சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.