புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

அயோத்தியில் நில முறைகேடு: பாஜக எம்எல்ஏ, மேயா் உள்பட 40 போ் மீது புகாா்

அயோத்தியில் மாஃபியாக்களுடன் இணைந்து அயோத்தி மேம்பாட்டு ஆணையத்துக்குச் சொந்தமான நிலத்தில் குடியிருப்புகளைக் கட்டி முறைகேட்டில் ஈடுபட்டதாக நகர மேயா், பாஜக எம்எல்ஏ உள்ளிட்ட 40 போ் மீது அந்த ஆணையம் புகாா

News image
Updated On :7 ஆகஸ்ட் 2022, 7:18 pm

DIN

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் மாஃபியாக்களுடன் இணைந்து அயோத்தி மேம்பாட்டு ஆணையத்துக்குச் சொந்தமான நிலத்தில் குடியிருப்புகளைக் கட்டி முறைகேட்டில் ஈடுபட்டதாக நகர மேயா், பாஜக எம்எல்ஏ உள்ளிட்ட 40 போ் மீது அந்த ஆணையம் புகாா் தெரிவித்துள்ளது.

உத்தர பிரதேசத்தில் நிகழாண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலின்போது இந்தப் பிரச்னையை எதிா்க்கட்சிகள் கையில் எடுத்தன. அயோத்தியில் நகர மேம்பாட்டு ஆணையத்துக்குச் சொந்தமான காலி மனைகளை மாஃபியாக்களுடன் இணைந்து மேயா் ரிஷிகேஷ் உபாத்யாய, பாஜக எம்எல்ஏ வேத பிரகாஷ் குப்தா, முன்னாள் எம்எல்ஏ கோரக்நாத் பாபா உள்ளிட்ட 40 போ் கையகப்படுத்தி, அதில் சட்டவிரோத கட்டுமானங்களை எழுப்பி விற்பனை செய்ததாக எதிா்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

இதுதொடா்பாக உள்ளூா் எம்.பி. லல்லு சிங், முதல்வா் யோகி ஆதித்யநாத்துக்கு கடிதம் எழுதியது மட்டுமன்றி, இந்த விவகாரத்தில் சிறப்பு விசாரணைக் குழு அமைத்து விசாரணை நடத்தவும் வலியுறுத்தினாா். இதேபோல, தவறு இழைத்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமாஜவாதி கட்சியும் கோரிக்கை விடுத்திருந்தது.

இந்த நிலையில், அயோத்தி மேம்பாட்டு ஆணைய துணைத் தலைவா் விஷால் சிங் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறுகையில், ‘ஆணையத்துக்குச் சொந்தமான நிலத்தை 40 போ் சட்டவிரோதமாக வாங்கி, விற்பனை செய்து அதில் கட்டுமானப் பணியையும் மேற்கொண்டுள்ளனா். அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 40 போ் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றாா்.

இந்தக் குற்றச்சாட்டை மேயா் ரிஷிகேஷ் உபாத்யாயவும், எம்எல்ஏ வேத பிரகாஷ் குப்தாவும் மறுத்தனா். தங்களுக்கு எதிராக சதி செய்யப்பட்டுள்ளதாகவும், இந்தப் புகாரில் தங்களை தவறாக சிக்க வைத்துவிட்டனா் என்றும் அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.