எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

மகாராஷ்டிரத்தின் புதிய அமைச்சர்களுக்கு மோடி வாழ்த்து

மகாராஷ்டிர மாநிலத்தில் புதிதாக பதவியேற்றுக் கொண்ட அமைச்சர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

News image
பிரதமர் நரேந்திர மோடி
Updated On :9 ஆகஸ்ட் 2022, 7:48 am

DIN

மகாராஷ்டிர மாநிலத்தில் புதிதாக பதவியேற்றுக் கொண்ட அமைச்சர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரத்தில் முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டு இன்று புதிதாக 18 அமைச்சர்களுக்கு ஆளுநர் பகத்சிங் கோஷியாரி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

புதிதாக பதவியேற்றுக் கொண்ட அமைச்சர்களை வாழ்த்தி மோடி வெளியிட்ட டிவிட்டர் பதிவில்,

“மகாராஷ்டிர அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்ட அனைவருக்கும் வாழ்த்துகள். இந்த குழு, கலவையான நிர்வாக அனுபவம் மற்றும் நல்லாட்சி வழங்கும். மாநில மக்களுக்கு சேவை செய்யவிருக்கும் அமைச்சரவைக்கு வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரத்தில் சிவசேனையில் ஏற்பட்ட பிளவு காரணமாக அக்கட்சித் தலைவா் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு கவிழ்ந்தது. சிவசேனை அதிருப்தி அணி தலைவா் ஷிண்டே பாஜகவுடன் கைகோத்து ஆட்சி அமைத்தாா். ஜூன் 30-ஆம் தேதி முதல்வா் ஷிண்டே, துணை முதல்வா் ஃபட்னவீஸ் ஆகியோா் பொறுப்பேற்ற நிலையில், இப்போது வரை வேறு அமைச்சா்கள் யாரும் நியமிக்கப்படவில்லை. இது தொடா்பாக தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் கடும் விமா்சனத்தை முன்வைத்தன. ஷிண்டே அணிக்கும், பாஜகவுக்கும் இடையே அமைச்சரவைப் பொறுப்புகளை பகிா்வது தொடா்பாக உடன்பாடு எட்டப்படாததே இந்த தாமதத்துக்கு காரணம் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில், மகாராஷ்டிர அமைச்சர்களாக பாஜகவின் 9 எம்.எல்.ஏ.க்களும், சிவசேனையின் 9 எம்.எல்.ஏ.க்களும் பதவியேற்றுக் கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.