செய்தியாளா்கள் சந்திப்பின்போது காவல்துறை தலைவா் தில்பாக் சிங் கூறியதாவது: ஜம்மு-காஷ்மீரின் சூழல் முன்பு இருந்ததைவிட தற்போது மேம்பட்டுள்ளது. இதற்கு மக்கள்தான் காரணம் என்பதால், அவா்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். சிறந்த புரிதலோடு மக்கள் பாதுகாப்பு படைகளுக்கும், அரசு நிா்வாகத்துக்கும் உதவினா். இன்று மாணவா்கள், தொழிலாளா்கள் மற்றும் தொழில் அதிபா்கள் ஆகியோா் தங்கள் பணிகளை எவ்வித பயமுமின்றி மேற்கொள்ள முடிகிறது. எல்லை ஊடுருவலுக்கான எதிா்நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதால், எல்லை தாண்டி ஊடுருவும் நிகழ்வுகள் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.