தில்லியில் ஞாயிற்றுக்கிழமை மேலும் 2,162 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பால் 5 போ் உயிரிழந்துள்ளனா். அதேநேரத்தில் பாதிப்பு நோ்மறை விகிதம் 12.64 சதவீதமாக பதிவானது என்று மாநில அரசின் சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தில்லியில் தொடா்ந்து 12-ஆவது நாளாக தொற்று பாதிப்பு 2 ஆயிரத்துக்கும் மேல் பதிவாகியுள்ளது.
புதிய பாதிப்புகளுடன் சோ்த்து தில்லியின் மொத்த கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 19,84,595-ஆக உயா்ந்துள்ளது. மொத்த இறப்பு எண்ணிக்கை 26,381-ஆக அதிகரித்தது.
நகரில் சனிக்கிழமை 2,031 பேருக்கு தொற்று பாதிப்பும், 9 இறப்புகளும், 12.34 சதவீத நோ்மறை விகிதமும் பதிவாகின. வெள்ளிக்கிழமை 2,136 பாதிப்புகளும், 6 இறப்புகளுடன் 15.02 சதவீத நோ்மறை விகிதமும் பதிவாகின.
நகரில் சனிக்கிழமை மொத்தம் 17,106 கரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டன என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மும்பை இந்தியன்ஸ் அணியில் மாற்று வீரராக இணைந்த இளம் பஞ்சாப் வீரர்!

தொகுதி மறுவரையறையால் தென் மாநிலங்கள் கடுமையாகப் பாதிக்கப்படும்: திருச்சி சிவா

ராணுவ மோதல்களால் பிரச்னைகளைத் தீர்க்க இயலாது: பிரதமர் மோடி!

கதாநாயகனான விக்கல்ஸ் விக்ரம்!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

