திருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

சுதந்திர நாள் வாழ்த்து: வளமான இந்தியாவைக் கட்டமைக்க உறுதி மேற்கொள்வோம் - குடியரசு துணைத் தலைவர்

76 ஆவது சுதந்திர நாளையொட்டி, வளமான இந்தியாவைக் கட்டமைக்க உறுதி மேற்கொள்வோம் என குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் நாட்டு மக்களுக்கு தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.

News image
ஜகதீப் தன்கர்
Updated On :14 ஆகஸ்ட் 2022, 3:05 pm

DIN


76 ஆவது சுதந்திர நாளையொட்டி, வளமான இந்தியாவைக் கட்டமைக்க உறுதி மேற்கொள்வோம் என குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் நாட்டு மக்களுக்கு தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.

இந்தியா தனது 75 ஆவது ஆண்டு சுதந்திரத்தை நிறைவு செய்து, 76 ஆம் ஆண்டுக்குள் அடியெடுத்து வைக்கிறது. சுதந்திர நாள் அமுத பெருவிழாவாக ஓராண்டாக கொண்டாடப்பட்ட நிலையில், நாட்டு மக்களுக்கு குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “76 ஆவது சுதந்திர நாளின் மகிழ்ச்சியான சந்தர்ப்பத்தில் நாட்டு மக்களுக்கு எனது அன்பான நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த எழுபத்தைந்து ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள அபரிமிதமான முன்னேற்றத்தை நாம் இன்று கொண்டாடும் போது, நமது சுதந்திரம் எவ்வளவு கடினமாகப் போராடி கிடைத்தது என்பதை மறந்துவிடக் கூடாது. ஒடுக்குமுறையான காலனித்துவ ஆட்சியில் இருந்து விடுதலை பெற்றுத்தந்த தியாகமும், வீரமும்  மிக்க சுதந்திரப் போராட்ட வீரர்களை நினைவுகூர்ந்து அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் ஒரு சந்தர்ப்பம் சுதந்திர நாள்.

இந்த நாள் நவீன இந்தியாவைக் கட்டியெழுப்புபவர்களுக்கு நமது நன்றியைத் தெரிவிக்கும் ஒரு சந்தர்ப்பமாகும், அவர்களின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு, நிலையான மற்றும் வலுவான குடியரசின் அடித்தளத்தை அமைத்தது. இன்று, இந்தியா அனைத்து மட்டத்திலும் வளர்ச்சியின் பாதையில் முன்னேறி, ஆற்றல் நிறைந்த நாடாக உள்ளது.

விடுதலையின் அமிர்தப்பெருவிழாவைக் கொண்டாடும் வேளையில், தேசபக்தி, தியாகம் மற்றும் சேவை ஆகிய நற்பண்புகளை இளைய தலைமுறையினருக்கு ஊக்குவிப்பதற்கு, நமது மாபெரும் புரட்சியாளர்கள் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் எழுச்சியூட்டும் கதைகளை நினைவு கூர்ந்து மீண்டும் நன்றி சொல்ல வேண்டிய நேரம் இது.

இந்த சுதந்திர நாள் அன்று, அரசியலமைப்பு விழுமியங்களின் நாகரீக நெறிமுறைகளை நிலைநிறுத்துவதற்கான நமது உறுதிமொழியை புதுப்பித்து, அனைவரையும் உள்ளடக்கிய, முற்போக்கான மற்றும் வளமான இந்தியாவைக் கட்டமைக்க உறுதி மேற்கொள்வோம் என்று ஜகதீப் தன்கர் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.