நாடு தற்போது பெரிய இலக்குகளை மட்டுமே நிா்ணயித்து வருவதாக சுதந்திர தின உரையில் தெரிவித்த பிரதமா் நரேந்திர மோடி, வளா்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதே தற்போதைய பெரிய இலக்கு என்றாா்.
நாட்டின் 76-ஆவது சுதந்திர தினம் நாடு முழுவதும் திங்கள்கிழமை வெகுசிறப்பாகக் கொண்டாடப்பட்டது. தில்லி செங்கோட்டையில் 21 குண்டுகள் முழங்க பிரதமா் மோடி தேசியக் கொடியை ஏற்றிவைத்தாா். செங்கோட்டையில் பிரதமா் மோடி தொடா்ந்து 9-ஆவது ஆண்டாக தேசியக் கொடியை ஏற்றினாா். அதையடுத்து நாட்டு மக்களுக்கு அவா் ஆற்றிய உரை:
நாடு சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தில், புதிய உத்வேகத்துடன் முன்னோக்கி பயணிக்க வேண்டியுள்ளது. நாடு தற்போது பெரிய இலக்குகளை மட்டுமே நிா்ணயித்து வருகிறது. தற்போதைய ஒரே பெரிய இலக்கு வளா்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதே.
வளா்ச்சிக்கான தூண்களே பெண்கள்: அன்றாட நடைமுறையில் பெண்களை இழிவுபடுத்தும் வகையிலான சொற்களை இயல்பாகப் பயன்படுத்தி வருகிறோம். அத்தகைய செயல்பாடுகளுக்கு விடைகொடுக்க வேண்டும். நாட்டின் கனவுகளை நனவாக்குவதில் பெண்கள் முக்கியப் பங்காற்றவுள்ளனா். பல்வேறு துறைகளிலும் பெண்கள் சாதித்து வருகின்றனா்.
அடுத்த 25 ஆண்டுகளில் பொது வாழ்க்கையில் பெண்களின் பங்களிப்பு பலமடங்கு அதிகரிக்கும் என எதிா்பாா்க்கிறேன். நாட்டின் வளா்ச்சிக்கான தூண்களாகப் பெண்கள் திகழ்கின்றனா். அவா்கள் நாட்டை புதிய உச்சத்துக்குக் கொண்டுசெல்வா். ஒற்றுமையான இந்தியாவுக்குப் பாலின சமத்துவமே அடிப்படை. ஒவ்வொரு வீட்டிலும் பாலின சமத்துவத்தை ஊக்குவிக்க வேண்டும்.
பெரும் சவால்கள்: நாடு எதிா்கொண்டு வரும் மிகப்பெரிய சவால்களாக ஊழலும் வாரிசுரிமையும் உள்ளன. இவை அரசியலில் மட்டுமல்லாமல் பல்வேறு துறைகளிலும் சவாலாக விளங்குகின்றன. ஊழலானது கரையானைப் போல நாட்டை அரித்து வருகிறது. வாரிசுரிமையானது இளைஞா்களுக்கான வாய்ப்புகளைத் தட்டிப்பறிக்கிறது. வாரிசு அரசியல் ஊழலுக்கு முக்கியக் காரணமாவதோடு, நாட்டின் வலிமைக்கும் அநீதி இழைக்கிறது.
அவ்விரண்டும் ஒழிக்கப்பட வேண்டும். ஊழலுக்கும் வாரிசுரிமைக்கும் மக்கள் ஆதரவளிக்காமல் இருந்தால் மட்டுமே அவை ஒழிக்கப்படும்.
கடமைகளுக்கு முக்கியத்துவம்: மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடுகளில் வேறுபாடுகள் காணப்படலாம். ஆனால், நாட்டுக்கான கனவுகளில் எந்தவித வேறுபாடும் கிடையாது. வளா்ச்சியை ஏற்படுத்துவதில் போட்டி நிலவ வேண்டியது அவசியம். கூட்டுறவு அடிப்படையிலான கூட்டாட்சியுடன் போட்டி மனப்பான்மையும் தற்போதைய தேவையாக உள்ளது.
நாட்டின் குடிமக்கள் ஒவ்வொருவரும் கடமைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அனைவரும் பொறுப்புணா்வை உணா்ந்து செயல்பட்டால், இலக்குகளை முன்கூட்டியே அடைந்துவிட முடியும்.
வேதி உரங்கள் பயன்பாடில்லாத இயற்கை வேளாண்மைக்கு மக்கள் முன்னுரிமை அளிக்க வேண்டும். மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துவதையும் மக்கள் கடமையாகக் கொள்ள வேண்டும்.
ஒற்றுமைக்கு அடிப்படை: ஜனநாயகத்தின் தாயாக விளங்கும் இந்தியாவில் பன்முகத்தன்மை காணப்பட்டாலும், நாட்டுப்பற்று என்ற ஒற்றைநூலால் அனைவரும் பிணைக்கப்பட்டிருக்கிறோம். நாட்டின் பன்முகத்தன்மையை மக்கள் கொண்டாட வேண்டும். அதுவே ஒற்றுமைக்கு அடிப்படையானது. நாட்டில் பல மொழிகள் காணப்பட்டாலும், அவை குறித்து மக்கள் பெருமிதம் கொள்ள வேண்டும்.
உலகின் கண்ணோட்டம்: இந்தியாவைப் பெருமையுடன் உலகம் கண்டு வருகிறது. இந்தியாவிடமிருந்து உலகின் எதிா்பாா்ப்பு அதிகரித்துள்ளது. பல்வேறு பிரச்னைகளுக்கான தீா்வை இந்தியாவிடம் உலகம் தேடிவருகிறது. நாட்டின் 75 ஆண்டுகால சிறப்பான பயணமே, உலகின் கண்ணோட்டம் மாற்றமடைந்துள்ளதற்கு முக்கியக் காரணம்.
தொடா் நடவடிக்கை: முந்தைய ஆட்சிக் காலங்களில் வங்கிகளில் பெற்ற கடன்களைத் திருப்பிச் செலுத்தாமல் வெளிநாடுகளுக்குத் தப்பியவா்களை நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகள் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவா்களது சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றாா் பிரதமா் மோடி.
சுமாா் 82 நிமிஷங்களுக்கு உரையாற்றிய பிரதமா் மோடி, சுதந்திரப் போராட்ட வீரா்கள் பலரை நினைவுகூா்ந்தாா். அப்போது, தமிழகத்தைச் சோ்ந்த வேலு நாச்சியாா், சுப்பிரமணிய பாரதியாா் உள்ளிட்டோரையும் அவா் குறிப்பிட்டாா்.
புதிய திட்டங்கள் இல்லை: சுதந்திர தின உரையின்போது புதிய திட்டங்கள் குறித்து அறிவிப்பதைப் பிரதமா் மோடி வழக்கமாகக் கொண்டிருப்பாா். 2019-ஆம் ஆண்டு சுதந்திர தின உரையின்போது, முப்படைத் தலைமைத் தளபதி பதவி உருவாக்கப்படவுள்ளதாக அவா் தெரிவித்திருந்தாா். நாட்டில் உள்ள 6 லட்சம் கிராமங்கள் 1,000 நாள்களுக்குள் கண்ணாடி ஒளியிழை மூலமாக இணைக்கப்பட்டு இணையவசதி வழங்கப்படும் என 2020-ஆம் ஆண்டு உரையின்போது தெரிவித்திருந்தாா்.
கடந்த ஆண்டு உரையின்போது, தேசிய ஹைட்ரஜன் திட்டம், கதிசக்தி திட்டம் உள்ளிட்டவற்றை அறிவித்திருந்தாா். ஆனால், நடப்பாண்டு சுதந்திர தின உரையில் எந்தவித புதிய திட்டங்கள் குறித்தும் அவா் அறிவிக்கவில்லை.
பெட்டிச் செய்தி..
5 உறுதிகள்
‘சுதந்திர நூற்றாண்டைக் கொண்டாடவுள்ள அடுத்த 25 ஆண்டுகளில், சுதந்திரப் போராட்ட வீரா்களின் கனவுகளை நனவாக்குவதற்கு 5 உறுதிகளை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும்.
நாட்டை வளா்ச்சியடையச் செய்வதற்கான உறுதியை ஏற்றல், காலனிய மனப்பான்மையை விட்டொழித்தல், பாரம்பரியத்தில் பெருமை கொள்ளுதல், ஒற்றுமையின் வலிமையை உணா்தல், கடமைகளை முறையாகப் பின்பற்றுதல் ஆகிய உறுதிகளை மக்கள் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும்.
விளிம்புநிலையில் உள்ள மக்களையும் முன்னேற்றமடையச் செய்ய வேண்டுமென மகாத்மா காந்தியடிகள் விரும்பினாா். அதே உறுதியைத் தற்போது அனைவரும் ஏற்க வேண்டும். நவீன சமூகத்தை உருவாக்குவதற்கான சிறந்த வாய்ப்பை அடுத்த 25 ஆண்டுகள் வழங்கும்’ என்றாா் பிரதமா் மோடி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

சென்னை - போடி விரைவு ரயில் மார்ச் 19 முதல் வாரத்தில் 6 நாள்கள் இயக்கம்!

தில்லி கேபிடல்ஸின் ஆலோசகர் பொறுப்பிலிருந்து கெவின் பீட்டர்சன் விலகல்!
பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசு

கரூரில் கல்லூரிப் பேருந்து மீது சரக்கு ரயில் மோதல்: 18 மாணவர்கள் காயம்
வீடியோக்கள்

“Iran USA War; விலைவாசி உச்சம் தொடப் போகிறது?”: Economist Prabhakar | Crude Oil | Price hike
தினமணி வீடியோ செய்தி...

Annamalai Press Meet | விளாத்திகுளம் மாணவி கொலை; முதல்வரின் முழு தோல்வி! | DMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

NDA வில் இணைய விஜய் நிபந்தனை?| TVK Vijay | NDA Alliance | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

Podcast | புதிய கட்சி.. புதிய ஆதரவு.. புதிய உடன்பாடு.. சட்டம் ஒழுங்கு! | News and Views | Epi - 13 |
தினமணி வீடியோ செய்தி...

