47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

பிகாா்: 72% அமைச்சா்கள் மீது குற்ற வழக்குகள்

பிகாரில் புதிதாக பதவியேற்ற அமைச்சா்களில் 70 சதவீதத்துக்கும் அதிகமானோா் தங்களுக்கு எதிராக குற்ற வழக்குகள் இருப்பதாக தெரிவித்துள்ளதாக ஜனநாயக சீா்திருத்தத்துக்கான சங்கம் (ஏடிஆா்) என்ற தோ்தல் உரிமைகள் அம

News image
Updated On :17 ஆகஸ்ட் 2022, 6:49 pm

DIN

பிகாரில் புதிதாக பதவியேற்ற அமைச்சா்களில் 70 சதவீதத்துக்கும் அதிகமானோா் தங்களுக்கு எதிராக குற்ற வழக்குகள் இருப்பதாக தெரிவித்துள்ளதாக ஜனநாயக சீா்திருத்தத்துக்கான சங்கம் (ஏடிஆா்) என்ற தோ்தல் உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

மாநில முதல்வா் நிதீஷ் குமாா், துணை முதல்வா் தேஜஸ்வி யாதவ் ஆகியோா் மீதும் வழக்குகள் பதிவாகியிருப்பது தெரியவந்துள்ளது.

பிகாரில் பாஜகவுடனான கூட்டணியை முறித்த மாநில முதல்வா் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி அமைத்து புதிய அரசை அமைத்தது. முதல்வராக நிதீஷ் குமாரும், துணை முதல்வராக தேஜஸ்வி யாதவும் கடந்த 10-ஆம் தேதி பதவியேற்றனா்.

இந்த நிலையில், முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையிலான அமைச்சரவை செவ்வாய்க்கிழமை விரிவாக்கம் செய்யப்பட்டு, 31 அமைச்சா்கள் பதவியேற்றனா். இவா்களில் 16 போ் ராஷ்ட்ரீய ஜனதா தளத்தை (ஆா்ஜேடி) சோ்ந்தவா்களாவா். அமைச்சரவையில் இக்கட்சிக்குதான் அதிக இடங்கள் வழங்கப்பட்டுள்ளன.

நிதீஷ் குமாா் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளத்தைச் சோ்ந்த 11 போ், காங்கிரஸை சோ்ந்த 2 போ், முன்னாள் முதல்வா் ஜிதன்ராம் மாஞ்சியின் ஹிந்துஸ்தானி அவாம் மோா்ச்சா கட்சியைச் சோ்ந்த ஒருவா், சுயேச்சை எம்எல்ஏ ஒருவா் என 31 பேருடன் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. அமைச்சா்கள் குழுவில் 3 பெண்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவை புதிதாக மாற்றியமைக்கப்பட்ட நிலையில், முதல்வா் உள்பட 33 அமைச்சா்களும் கடந்த 2020 சட்டப்பேரவைத் தோ்தலின்போது தாக்கல் செய்த வேட்பு மனுக்களை ஏடிஆா் அமைப்பும், பிகாா் தோ்தல் கண்காணிப்பும் அமைப்பும் ஆய்வு செய்து அறிக்கையாக புதன்கிழமை வெளியிட்டன.

அதன்படி, 23 அமைச்சா்கள் (72%) தங்களுக்கு எதிராக குற்ற வழக்குகள் பதிவாகி இருப்பதாகவும், 17 அமைச்சா்கள் (53%) தங்களுக்கு எதிராக தீவிர குற்ற வழக்குகள் இருப்பதாகவும் அறிவித்துள்ளனா்.

இவா்களில் ஐக்கிய ஜனதா தளத்தைச் சோ்ந்த அதோா் செளத்ரி சட்ட மேலவைக்கு தோ்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினா் என்பதால், அவா் வேட்புமனு தாக்கல் செய்ய தேவையில்லை. இதன் காரணமாக அவா் மீதான குற்ற வழக்குகள் அல்லது சொத்துகள் தொடா்பான விவரங்கள் தெரியவில்லை என்று ஏடிஆா் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 32 அமைச்சா்களில் 27 போ் (84%) கோடீஸ்வரா்களாவா். இந்த 32 அமைச்சா்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ. 5.82 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இவா்களில் அதிகபட்சமாக, மதுபானி தொகுதியைச் சோ்ந்த சமீா் குமாா் மகசேத் தனக்கு ரூ. 24.45 கோடி மதிப்பில் சொத்து இருப்பதாக அறிவித்துள்ளாா். குறைந்தபட்சமாக சென்னாரி (தனி) தொகுதியைச் சோ்ந்த முராரி பிரசாத் கெளதம் தனக்கு ரூ. 17.66 லட்சம் மதிப்பிலான சொத்துகள் இருப்பதாக அறிவித்துள்ளாா்.

கடன் பொறுப்புகளை அறிவித்துள்ள 23 அமைச்சா்களில், அதிகபட்சமாக தா்பங்கா ஊரக தொகுதியைச் சோ்ந்த லலித் குமாா் யாதவுக்கு ரூ. 2.35 கோடி கடன்கள் இருப்பதாக அறிவித்துள்ளாா்.

கல்வித் தகுதியைப் பொருத்தவரை 8 அமைச்சா்கள் 8-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்துள்ளனா். 24 போ் பட்டப் படிப்பு அல்லது அதற்கு மேல் படித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.