2029-க்குள் பாஜக ஆளும் மாநிலங்களில் பொது சிவில் சட்டம்: அமித் ஷாதொடர் விடுமுறை: செப். 14, 15 தேதிகளில் 3,565 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிதமிழ்நாட்டில் இனி யார் ஆட்சிக்கு வந்தாலும் கூட்டணி ஆட்சிதான்: திருமாவளவன்விநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்பு

ஜம்மு-காஷ்மீரில் துப்பாக்கிச் சூடு: பயங்கரவாதிகள் தப்பியோட்டம்

தெற்கு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் உள்ள குட்போராவில் போலீசார் மற்றும் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பயங்கரவாதிகள் தப்பியோடியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

Published On :

தெற்கு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் உள்ள குட்போராவில் போலீசார் மற்றும் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பயங்கரவாதிகள் தப்பியோடியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

குறிப்பிட்ட புலனாய்வு தகவலின் அடிப்படையில் பாதுகாப்புப் படையினர் அப்பகுதியைச் சுற்றி வளைத்ததையடுத்து இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. 

பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினர் மீது கையெறி குண்டுகளை வீசி பதிலடி கொடுத்தனர். ஆனால் இருளைப் பயன்படுத்தி பயங்கரவாதிகள் தப்பியோடினர். 

பயங்கரவாதிகள் மறைவிடத்தில் ஆயுதங்கள், வெடி மருந்துகள் ஆகியவற்றை காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படையினர் கூட்டாக இணைந்து மீட்டுள்ளனர். 

சம்பவ இடத்தில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.