ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

சித்தராமையாவுக்கு கொலை மிரட்டல்: 16 பேர் கைது

கார்நாடக மாநில எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையாவுக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

News image
Updated On :20 ஆகஸ்ட் 2022, 10:12 am

கார்நாடக மாநில எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையாவுக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கர்நாடகத்தின் சிவமோகா மாவட்டத்தில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் சுதந்திரப் போராட்ட வீரர் வீர சாவர்க்கரின் படம் வைக்கப்பட்டதற்கு, மாநில முன்னாள் முதல்வரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான சித்தராமையா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். 

இதையடுத்து, குடகு பகுதியில் சித்தராமையாவின் கார் மீது முட்டைகள் வீசப்பட்டது. மேலும், தொலைபேசி மூலம் அவருக்கு ஏராளமான கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளன. இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்நிலையில் சித்தராமையாவுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து முழுமையாக விசாரிக்கப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்திருந்தார். 

கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக குடகில் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குஷால் நகரில் 9 பேர் மற்றும் மடிகேரியில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட அனைவரும் நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்படுவார்கள் என்று குடகு கண்காணிப்பாளர் ஐயப்பா தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.