தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

2 நாள் பயணமாக ஹிமாச்சல் செல்கிறார் ஜெ.பி நட்டா

பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா இரண்டு நாள் பயணமாக இன்று ஹிமாச்சலப் பிரதேசத்திற்கு செல்ல உள்ளதாக தனது டிவிட்டரில் தெரிவித்தார். 

News image
ஜெ.பி.நட்டா
Updated On :20 ஆகஸ்ட் 2022, 7:27 am

DIN

பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா இரண்டு நாள் பயணமாக இன்று ஹிமாச்சலப் பிரதேசத்திற்கு செல்ல உள்ளதாக தனது டிவிட்டரில் தெரிவித்தார். 

இதுகுறித்து அவர் டிவிட்டர் பதிவில், 

ஹிமாச்சலில் உள்ள நஹானுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளேன். எனது இளமைக் காலத்தில் பணிபுரிந்தபோது நஹான் பகுதியைச் சந்தித்த வாய்ப்பு, தற்போது மீண்டும் கிடைக்கப்போகிறது. பழைய நினைவுகளையும், தருணங்களை மீண்டும் அனுபவிக்கப் போகிறேன் என்று ஹிந்தியில் பதிவிட்டுள்ளார். 

மேலும், இந்தாண்டு இறுதியில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தல் குறித்து தலைவர்களுடன் ஆலோசிக்க உள்ளார். பெண்டா சாஹப்பில் பொதுக் கூட்டத்தில் பேசவுள்ளார். ஹிமாச்சலப் பிரதேசம் உருவாக்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் மாநிலத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சிகளிலும் அவர் கலந்துகொள்கிறார் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.