கர்நாடகம்: காங்கிரஸ் அலுவலகத்தில் சாவர்க்கர் படங்களை ஒட்டிய பாஜகவினர் 

கர்நாடக மாநிலம் விஜயபுராவிலுள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் பாஜகவினர் சாவர்க்கர் படங்களை ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
கர்நாடகம்: காங்கிரஸ் அலுவலகத்தில் சாவர்க்கர் படங்களை ஒட்டிய பாஜகவினர் 

கர்நாடக மாநிலம் விஜயபுராவிலுள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் பாஜகவினர் சாவர்க்கர் படங்களை ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

சிவமொக்காவில் ஆக.15-ஆம் தேதி நடந்த சுதந்திர தின விழாவின்போது, அமீா் அகமது சதுக்கத்தில் வீரசாவா்க்கா், திப்புசுல்தான் உருவப்படங்கள் அடங்கிய பதாகைகளை வைத்திருந்ததற்கு முஸ்லிம் மற்றும் ஹிந்து மதத்தை சோ்ந்தவா்கள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா். முன் அனுமதியில்லாததால் பதாகைகளை வைக்க போலீஸாா் அனுமதி அளிக்கவில்லை. எனினும், இது தொடா்பாக இது தரப்புக்கு இடையே மோதல் ஏற்பட்டது. கூட்டத்தைக் கலைக்க போலீஸாா் லேசான தடியடி நடத்தினா். அதில் ஒருவருக்கு கத்திக்குத்தானதை தொடர்ந்து கலவரம் நடக்காமல் இருக்க 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் சாவர்க்கர் புகைப்படத்தை வைப்பதும் திப்பு சுல்தான் புகைப்படத்தை கிழிப்பதும் ஏன்? பாஜக இரட்டைத்தனமான அரசியலை செய்கிறதென கர்நாடக எதிர்கட்சித்தலைவர் சித்தாராமைய்யா கேள்வி எழுப்பினார். 

அவர்களாகவே வந்து போஸ்டர் ஒட்டுகிறார்கள். பின் அவர்களே அதை கிழித்துவிட்டு பிரச்சனையில் ஈடுபடுகிறார்கள். அந்த போஸ்டர்களுக்கு பாதுகாப்பதற்காகவே காவல்துறையினரும் உறுதுணையாக உள்ளனர். இதைப் பார்ப்பதற்கு அசிங்கமாக இருக்கிறது. அதனாலயே நாங்கள் எதிர்க்கிறோம் என உள்ளூர் காங்கிரஸ் தலைவர் தெரிவித்தார். 

தற்போது கர்நாடக மாநிலம் விஜயபுராவிலுள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் சவார்க்கர் படங்களை பாஜகவினர் ஒட்டியுள்ளதால் மீண்டும் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com