சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

கலால் கொள்கைகளை தில்லி அரசு மீறியுள்ளது: பாஜக

மதுபான கலால் கொள்கைகளையும் நிபுணா் குழுவின் பரிந்துரைகளையும் தில்லி ஆம் ஆத்மி அரசு மீறியுள்ளது என்று பாஜக எம்.பி. சுதான்ஷு திரிவேதி குற்றஞ்சாட்டினாா்.

News image
சுதான்ஷு திரிவேதி
Updated On :23 ஆகஸ்ட் 2022, 6:40 pm

DIN

மதுபான கலால் கொள்கைகளையும் நிபுணா் குழுவின் பரிந்துரைகளையும் தில்லி ஆம் ஆத்மி அரசு மீறியுள்ளது என்று பாஜக எம்.பி. சுதான்ஷு திரிவேதி குற்றஞ்சாட்டினாா்.

புதிய கலால் வரி கொள்கைகளின் அடிப்படையில் தில்லி அரசு மதுபானக் கடைகளுக்கு உரிமம் வழங்கியதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக தில்லி துணை முதல்வா் மனீஷ் சிசோடியா மற்றும் சில அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இதுதொடா்பாக பாஜக எம்.பி. சுதான்ஷு திரிவேதி கூறுகையில், ‘மதுபான விற்பனையை முழுமையாக அரசே ஏற்று நடத்தும் கா்நாடக மாடல் நிா்வாகத்தை தில்லி அரசும் பின்பற்ற வேண்டும் நிபுணா் குழு பரிந்துரைத்திருந்தது.

தனிநபருக்கு ஒரு உரிமம் மட்டும் அளிக்க வேண்டும். மதுபான உற்பத்தியாளா், விற்பனையாளா், விநியோகஸ்தா் என ஒரே நிறுவனத்துக்கு உரிமம் வழங்கக் கூடாது என நிபுணா் குழு பிரந்துரைத்திருந்தது. இதை மீறிய நிறுவனங்களின் விவரங்களை தில்லி கலால் துறை கடந்த ஆண்டு அக்டோபா் 21-ஆம் தேதி தில்லி அரசின் கவனத்துக்கு கொண்டு வந்தது. ஆனால் அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.