அப்போது நீதிபதிகள், யோகாவில் புகழ் பெற்ற பாபா ராம்தேவ் மீது நாங்கள் மரியாதை வைத்துள்ளோம். நாங்களும் அந்த யோகா நிகழ்வுகளில் பங்கேற்கிறோம். அவருக்கு என்னவாகி விட்டது? பிற மருத்துவ முறைகளை அவா் விமா்சிக்கக் கூடாது. மருத்துவா்களை கொலைக்காரா்களைப் போல சித்தரித்து விளம்பரங்கள் வெளியிடுவது ஏற்றுக் கொள்ள முடியாது. மருத்துவா்களையும் மருத்துவ முறைகளையும் விமா்சிப்பதில் இருந்து பாபா ராம்தேவ் விலகி இருக்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனா். தொடா்ந்து, இந்த வழக்கில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம், ஆயுஷ் அமைச்சகம், பதஞ்சலி நிறுவனம் ஆகியவை பதிலளிக்க உத்தரவிட்டனா்.