புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

"லத்தீன் அமெரிக்க நாடுகள் இந்தியாவுக்கு பெரிய வர்த்தக மையமாக இருக்க முடியும்'

லத்தீன் அமெரிக்க நாடுகளை இந்தியாவுக்கான பெரிய வர்த்தக மையமாக மாற்றுவதன் முக்கியத்துவத்தை வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :24 ஆகஸ்ட் 2022, 10:23 pm

DIN

லத்தீன் அமெரிக்க நாடுகளை இந்தியாவுக்கான பெரிய வர்த்தக மையமாக மாற்றுவதன் முக்கியத்துவத்தை வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார்.
பிரேஸில், பராகுவே, ஆர்ஜென்டினா ஆகிய நாடுகளில் அவர் தற்போது 6 நாள் பயணத்தை மேற்கொண்டுள்ளார். இந்த தென் அமெரிக்க நாடுகளில் அவர் பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும்.
சாவ் பாலோ மாகாண தொழில்துறைக் கூட்டமைப்பில் அந்நாட்டின் முக்கிய வர்த்தகர்களிடையே அவர் செவ்வாய்க்கிழமை பேசியது:
இந்தியாவும் பிரேஸிலும் தோழமை நாடுகள் மட்டுமின்றி தங்களது பரஸ்பர வளர்ச்சிக்கும் முன்னேற்றத்துக்கும் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்ள முடியும். கடந்த ஆண்டு லத்தீன் அமெரிக்க நாடுகளுடன் இந்திய வர்த்தகம் 5000 கோடி அமெரிக்க டாலருக்கும் சற்று குறைவாக இருந்தது. இதுபோன்ற கூட்டங்களை நாம் அதிகம் நடத்துவதோடு அதிக அளவிலான தொடர்புகளையும் ஏற்படுத்திக் கொண்டால் லத்தீன் அமெரிக்க நாடுகளை இந்தியாவுக்கான பெரிய வர்த்தக மையமாக மாற்ற முடியும்.
எரிசக்தி, தகவல் தொழில்நுட்பம், மருந்து உற்பத்தி, வேளாண் ரசாயனப் பொருள்கள், ஆட்டோமொபைல், இருசக்கர வாகன உற்பத்தி உள்ளிட்ட துறைகளில் பிரேஸிலில் இந்திய நிறுவனங்கள் செயல்படுகின்றன. மற்ற துறைகளிலும் நிறுவனங்கள் இங்கு வரவுள்ளன என்றார்.
இது தொடர்பாக எஸ்.ஜெய்சங்கர், ட்விட்டரில் வெளியிட்ட பதிவுகளில் கூறியிருப்பதாவது:
பிரேஸிலின் மிகப்பெரிய தொழில்துறை சங்கமான சாவ் பாலோ மாகாண தொழில்துறை கூட்டமைப்பினரைச் சந்தித்தேன். டபிள்யூஇஜி, எம்ப்ரேயர், யூனிகா ஆகிய நிறுவனங்கள் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட கருத்துரைகள் மிகப்பெரிய வர்த்தக ஒத்துழைப்புக்கான வாய்ப்புகள் இருப்பதை உறுதிப்படுத்தின. உறவுகளை மேம்படுத்திக் கொள்ள முக்கியக் கருவியாக வர்த்தகம் திகழ்கிறது என்று தெரிவித்துள்ளார்.

 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.