ஜெய்ப்பூரில் 35 வயது பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜெய்ப்பூர் சந்திப்பு ரயில் நிலையம் அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது. குடிபோதையில் இருந்த கணவருக்கு உணவு வாங்கி வருவதற்காகப் பெண் வெளியே சென்றுள்ளார்.
இந்நிலையில், ரயில் நிலையம் அருகே 5 பேர் கொண்ட கும்பல் பெண்ணை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றுள்ளனர். பின்னர், அந்தப் பெண் அவர்களிடமிருந்து தப்பித்து அருகில் உள்ள காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்த சிறப்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு வந்தனர்
பெண் கொடுத்த புகாரின் பேரில் தடய அறிவியல் பிரிவினர் குற்றம் நடந்த இடத்திற்கு வந்து, சம்பவம் நடைபெற்ற இடத்தில் தடயங்களைச் சேகரித்தனர். தொடர்ந்து போலீசார் குற்றவாளிகளை வலைவீசித் தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து அரசு ரயில்வே காவல்துறையும் அறிக்கை வெளியிட்டு விசாரணை குறித்துத் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆட்சி அமைக்க எடப்பாடியுடன் தவெக பேச்சு: லீமா ரோஸ்

கருப்பு படத்தின் புதிய போஸ்டர்!

மாற்றத்தை நிகழ்த்திக் காட்டிய மக்களுக்கு நன்றி : விஜய்

காங்கிரஸிடம் ஆதரவு கேட்டார் விஜய் : கே.சி. வேணுகோபால்
வீடியோக்கள்
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை
திமுக கூட்டணி கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு தருமா? - வைகோ பேட்டி | TVK | Vijay | Vaiko
இணையதளச் செய்திப் பிரிவு


