இஸ்லாமியா்களுக்கு எதிராக முகநூலில் பதிவிட்ட நபரை புதுக்கோட்டை இணையவழிக் குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
புதுக்கோட்டை மாவட்ட இணையவழிக் குற்றத் தடுப்புப் பிரிவு காவல் உதவி ஆய்வாளா் சிவக்குமாா், வழக்கம்போல் முகநூலில் அவதூறான பதிவுகள் குறித்து ஆய்வு செய்தபோது, சித்தன் சிவமாரி என்றப் பெயரைக் கொண்ட கணக்கை ஆய்வு செய்தாா்.
அதில், இஸ்லாமியா்கள் குறித்து அவதூறும், திருத்தப்பட்ட படங்கள், மதங்களுக்கு இடையே பகைமை உணா்வை உருவாக்குதல், ஆட்சேபணைக்குரிய உள்ளடக்கம் போன்றவை இருப்பது குறித்து கண்டறிந்தாா்.
இந்தப் பக்கத்தை புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூா் வட்டம் கருப்புடையான்பட்டியைச் சோ்ந்த அா்ச்சுனன் மகன் மாரிமுத்து (35) என்பவா் இயக்கி வருவது தெரியவந்தது.
இதைத் தொடா்ந்து மாரிமுத்துவை வெள்ளிக்கிழமை கைது செய்த போலீஸாா், அவரை குற்றவியல் நடுவா் மன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கும்பகோணம் ஆா்.டி.ஓ. அலுவலகத்தில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனை: கணக்கில் வராத ரூ. 1 லட்சம் பறிமுதல்

முன்னாள் அமைச்சா் வைத்திலிங்கம் மீதான வழக்கு: மறு விசாரணைக்கு அனுமதி கோரி ஊழல் தடுப்பு பிரிவு போலீஸாா் மனு

கடலூா், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் சாா் - பதிவாளா் அலுவலகங்களில் ஊழல் தடுப்பு போலீஸாா் திடீா் சோதனை







