
பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா ஒரு நாள் அரசு முறை பயணமாக இன்று மதியம் அசாம் வருகிறார்.
கட்சியின் வடகிழக்கு அமைப்பு அலுவலகத்தைத் திறந்து வைப்பதற்கும், கட்சித் தொண்டர்கள் மத்தியில் உரை நிகழ்த்துவதற்கும் அவர் அசாமுக்கு வருகை தருவதாக பாஜக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
இதுதொடர்பாக மேலும் அவர் கூறுகையில்,
நட்டா பிற்பகலில் திரிபுராவிலிருந்து அசாம் வந்து, பாஜகவின் வடகிழக்கு நிறுவன தலைமை அலுவலகமான புதுப்பிக்கப்பட்ட பத்ம பவனை இன்று திறந்து வைக்கிறார்.
இந்தி நிகழ்ச்சியில் அசாம், அருணாச்சல், மணிப்பூர் மற்றும் திரிபுரா மாநில முதல்வர்கள் மற்றும் 8 வடகிழக்கு மாநிலங்களின் பாஜக மாநில தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.
நட்டா தில்லி திரும்புவதற்கு முன்பு, கட்சி தொண்டர்களிடம் இன்று மாலை உரையாற்ற உள்ளார். கட்சி அலுவலகத்துக்குச் செல்வதற்கு முன் காமாக்யா கோயிலுக்கும் அவர் செல்ல உள்ளார் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.