உ.பி.யில் பாலியல் துன்புறுத்தல்: சிறுமி தற்கொலைக்கு முயற்சி

உத்தரப் பிரதேசத்தின் கக்ரோலி கிராமத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான 15 வயது சிறுமி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
உ.பி.யில் பாலியல் துன்புறுத்தல்: சிறுமி தற்கொலைக்கு முயற்சி


முசாபர்நகர்: உத்தரப் பிரதேசத்தின் கக்ரோலி கிராமத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான 15 வயது சிறுமி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கக்ரோலி கிராமத்தில் இளைஞர் ஒருவர் 15 வயது சிறுமிக்குத் தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல்கள் கொடுத்துவந்தார். இதனால் அந்த சிறுமி பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி கடைசியில், விஷம் குடித்து தற்கொலை செய்துகொள்ள முயன்றுள்ளார். 

சிறுமியின் தந்தை, அவரை மீட்டுள்ளார். பின்னர், இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தார். 

புகாரில், தங்கள் கிராமத்தில் வேறு சமூகத்தைச் சேர்ந்த இளைஞரால், என் மகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளார். எனவே இளைஞர் மீது தீவிர நடவடிக்கை எடுக்குமாறு குற்றம் சாட்டினார்.

தலைமறைவான இளைஞரைப் பிடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கக்ரோலி காவல் நிலையத்தின் அதிகாரி ஜிதேந்தர் சிங் தெரிவித்தார்.

இந்தியத் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 354 கீழ் இளைஞர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

சிறுமியின் வாக்குமூலம் நீதிபதி முன்னிலையில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com