சித்தராமையா சென்றுவந்ததால் சுத்தப்படுத்தப்பட்ட குடகு கோயில்

அசைவம் சாப்பிட்டு குடகு பசவேஸ்வரா கோயிலுக்குச் வந்துச் சென்றார் சித்தராமையா என்று தகவல்கள் வெளியான நிலையில், ஒரு வாரத்துக்குப் பின் கோயிலை சுத்தப்படுத்தும் சடங்குகள் நடைபெற்றுள்ளன.
சித்தராமையா சென்றுவந்ததால் சுத்தப்படுத்தப்பட்ட குடகு கோயில்
சித்தராமையா சென்றுவந்ததால் சுத்தப்படுத்தப்பட்ட குடகு கோயில்

கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா அசைவம் சாப்பிட்டுவிட்டு குடகு பசவேஸ்வரா கோயிலுக்குச் வந்தார் என்று தகவல்கள் வெளியான நிலையில், ஒரு வாரத்துக்குப் பின் கோயிலை சுத்தப்படுத்தும் சடங்குகள் நடைபெற்றுள்ளன.

அசைவ உணவை உட்கொண்ட பிறகு கோயிலுக்கு சென்று வழிபாடு செய்ததாக கா்நாடக எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா மீது குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பாா்வையிடுவதற்காக அண்மையில் குடகு மாவட்டத்திற்கு சென்றிருந்த எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா, கோட்லிபேட்டில் உள்ள பசவேஸ்வரா கோயிலில் சென்று வழிபட்டாா். இந்த கோயிலுக்கு செல்வதற்கு முன் அவா் அசைவ உணவை உட்கொண்டிருந்ததாக காணொலி வெளியானதால், சா்ச்சை எழுந்தது. 

அதற்கு பதிலளித்த சித்தராமையா, ‘அசைவ உணவை உட்கொண்ட பிறகு கோயிலுக்கு வரக் கூடாது என்று எந்தக் கடவுளாவது கூறியிருக்கிறாரா? எந்த உணவை உட்கொள்வது என்பது என் தனிப்பட்ட விருப்பம்’ என்று பதிலளித்திருந்தாா். இது சா்ச்சையை வலுவாக்கியது. சித்தராமையாவின் நடவடிக்கைக்கு பாஜகவும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.

இந்து மத நம்பிக்கைக்கு எதிராக, இந்த விவகாரம் இருப்பதால், கோயிலை முறைப்படி சுத்தப்படுத்தி, சிறப்புப் பூஜைகளை செய்ய சனிக்கிழமை கோயில் நிர்வாகம் முடிவு செய்தது. இது குறித்து கோயில் நிர்வாகி வரப்பிரசாத் கூறுகையில், பக்தர்கள் அசைவ உணவுகளை சாப்பிட்டுவிட்டு பக்தர்கள் யாரும் கோயிலுக்கு வர வேண்டாம். அசைவம் சாப்பிட்டுவிட்டு ஒருவர் கோயிலுக்கு வந்ததாக எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து நாங்கள் கோயிலை சுத்தப்படுத்தி, சிறப்புப் பூஜைகளை செய்துள்ளோம் என்றார்.

இது குறித்து பாஜக எம்எல்ஏ பசன கௌடா பாட்டீல் கூறுகையில், ‘கோயிலுக்கு செல்லும்போது அங்கு கடைப்பிடிக்கப்படும் பழக்கங்களை பின்பற்ற வேண்டும். அதன்மூலம் அந்தக் கோயிலின் தெய்வத்தை வழிபடும் மக்களின் உணா்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். சித்தராமையா மக்களின் மத உணா்வுகளை புண்படுத்தக் கூடாது. பன்றி இறைச்சியைத் தின்றுவிட்டு, மசூதிக்குள் செல்லும் தைரியம் சித்தராமையாவுக்கு இருக்கிறதா?’ என்று கேட்டிருந்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com