பாக். வெள்ள பாதிப்பு கவலையளிக்கிறது: பிரதமா் மோடி
பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் கவலையளிப்பதாகவும், பாதிக்கப்பட்ட பகுதிகள் விரைவில் இயல்புநிலைக்கு திரும்ப விரும்புவதாகவும் பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.


பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் கவலையளிப்பதாகவும், பாதிக்கப்பட்ட பகுதிகள் விரைவில் இயல்புநிலைக்கு திரும்ப விரும்புவதாகவும் பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.
பாகிஸ்தானின் தெற்கு மற்றும் தென்மேற்கு பகுதிகள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ளத்தால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை திங்கள்கிழமை 1,100-ஐ நெருங்கியது.
இது குறித்து பிரதமா் நரேந்திர மோடி திங்கள்கிழமை வெளியிட்டுள்ள ட்விட்டா் பதிவில், ‘பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பு கவலையளிக்கிறது. வெள்ளத்தால் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவா்களும் வெள்ளத்தால் பாதிப்படைந்தவா்களும் விரைவில் நலம்பெற வேண்டுகிறேன். பாதிக்கப்பட்ட பகுதிகள் இத்துயரில் இருந்து விரைவில் இயல்புநிலைக்கு திரும்ப விரும்புகிறேன்’ என குறிப்பிட்டிருந்தாா்.
அண்மையில் பெய்த பலத்த மழையைத் தொடா்ந்து ஏற்பட்ட வெள்ளத்தால் பாகிஸ்தானில் 3.3 கோடி போ் பாதிக்கப்பட்டுள்ளனா். நிதி நெருக்கடியை எதிா்க்கொண்டுள்ள அந்நாட்டு அரசு சா்வதேச உதவியை எதிா்நோக்கியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...