ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 81 பேர்.. ஒன்றாக வாழ்கிறோம், ஒன்றாக வாக்களிக்கிறோம்

குஜராத்தில் தேர்தல் திருவிழா களைகட்டத் தொடங்கிவிட்டது. இன்று காலை முதல் வாக்குச்சாவடிகளில் ஏராளமான மக்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 81 பேர்..  ஒன்றாக வாழ்கிறோம், ஒன்றாக வாக்களிக்கிறோம்
Published on
Updated on
1 min read


சூரத்: குஜராத்தில் தேர்தல் திருவிழா களைகட்டத் தொடங்கிவிட்டது. இன்று காலை முதல் வாக்குச்சாவடிகளில் ஏராளமான மக்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

தேர்தலை விடவும் பரபரப்பாக பேசப்படும் வகையில், குஜராத்தின் சூரத் நகரில் வசிக்கும் ஒரு குடும்பம், சப்தமில்லாமல் வாழ்ந்து வருகிறது.

சகோதரர்களுக்குள் சண்டை, தந்தை - மகன் இடையே தகராறு என்று சென்றுகொண்டிருக்கும் காலத்தில், இங்கே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 81 பேர் ஒன்றாக வாழ்ந்து வருகிறார்கள்.

நாட்டின் ஒற்றுமை, கலாசாரம், உறவின் மாண்பு அனைத்தையும் உணர்த்தும் வகையிலும், எதிர்காலத் தலைமுறையினருக்கு புரிய வைக்கும் வகையிலும் இவர்கள் ஒன்றாக வாழ்ந்து வருவதோடு, ஒன்றாகச் சேர்ந்து சென்று தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றியுள்ளனர்.

காம்ரேஜ் பகுதியில் வசித்து வரும் இந்த சோலங்கி குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும், தேர்தலில் வாக்களிப்பது எவ்வளவு முக்கியம் என்பதை எடுத்துக்காட்டும் வகையில், அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களித்துவிட்டு திரும்பியிருக்கிறார்கள்.

இங்கு மூத்த குடிமகனாக 82 வயது நபரும், முதல் முறை வாக்களிக்கும் இளைஞர்கள் இரண்டு பேரும் உள்ளனர். நவாகாம் வாக்குச்சாவடிகளுக்கு பல்வேறு வாகனங்களில் சென்று இவர்கள் தங்களது வாக்குகளை அளித்துள்ளனர். 81 பேர் கொண்ட இந்தக் குடும்பத்தில் 60 பேர் வாக்களிக்கும் வயதை அடைந்தவர்கள். 

மற்றவர்களையும் வாக்களிக்க வைக்க வேண்டும் என்று உற்சாகப்படுத்தவே, அனைவரும் ஒன்றாகச் சென்று வாக்களிக்கிறோம் என்கிறார்கள் இந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.

இன்னும் சொல்லப் போனால், இந்தக் குடும்பத்தில் மொத்தம் 96 பேராம். இவர்களில் 15 பேர் கிராமத்தில் வசிக்கிறார்களாம். 81 பேர் பணிநிமித்தமாக காம்ரேஜ் பகுதியில் வசிக்கிறார்களாம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com